கனமழை எச்சரிக்கை: 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கே நிலை கொண்டுள்ள நிலையில், தீவிர புயலாக மாறி இன்று (அக்டோபர் 28) ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

மழையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க:

  • சென்னை: மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவுப்படி, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவுப்படி, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • ராணிப்பேட்டை: மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment