செய்தி சுருக்கம்: சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் (NITI Aayog) அறிக்கையின்படி இந்தியாவில் 2012-2014 காலகட்டத்தில் இருந்த 1000 ஆண்களுக்கு 906 பெண்கள் என்ற பிறப்பு விகிதம் 2013-2015 காலகட்டத்தில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவில் சரிந்தது. இந்தியாவின் 17 மாநிலங்களில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதுவரையிலும் பெண்களின் பிறப்பு விகிதம் ஆண்களுக்கு இணையாக இருந்தது இல்லைதான், எனினும் தற்போது மிகவும் குறைந்து இருப்பதாக சொல்கிறது நிதி ஆயோக், அதிகபட்சமாக […]
இன்று உலகம் முழுவதிலும் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. அதன் ஆற்றலையும் அதிவேகமான பாய்ச்சலையும் கண்டால் மிகவும் வியப்பாகவே உள்ளது. சாட் ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற சாட்பாட் உதவியால் பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மருத்துவம், பாதுகாப்பு, வணிகம், நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் இன்று ஏ.ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சி வருகிறது. மனிதனைப் போலவே சிந்தித்துப் […]
உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களாக இருந்தால், அத்தகைய பழக்கம் இல்லாத குழந்தைகளைக் காட்டிலும் அவர்கள் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு கடந்த மாதம் ஜூலை 20-ல் இருந்து 27க்குள் எபிக் என்னும் நிறுவனத்தின் சார்பில் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஒன்போலால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவில் சந்தை ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுக்கருத்து ஆராய்ச்சிக்கான அமெரிக்கச் சங்கம் […]
பரந்த அளவிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா, சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பிரபல தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டீனின் சமீபத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. காப்புரிமை, அந்நிய நேரடி முதலீடு, அந்நியச் செலாவணி இருப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பகுப்பாய்வு செய்த பெர்ன்ஸ்டீன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்த இடைவெளியைத் தெரிவித்துள்ளது. காப்புரிமையைப் பொறுத்தவரை, இந்தியா சீனாவை விட 21 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. அந்நிய நேரடி […]
செய்தி சுருக்கம்: இந்தியப் பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கி தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எல்லை விவகாரம் ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? சீனா வெளியிட்டுள்ள தனது புதிய ‘ஸ்டாண்டர்டு மேப்’ என்னும் வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த செயல் உலகரங்கில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது முதல்முறை அல்ல. பின்னணி: சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய எல்லைகளை சரியாக ஆய்வு செய்து பிரிக்காததால் இந்த […]
செய்தி சுருக்கம்: கடந்த திங்கள் கிழமை (04-09-2023) உலக சுகாதார அமைப்பு WHO – World Health Organization உலகமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி கல்லீரல் பாதிப்பை கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் DEFITELIO என்ற மருந்தில் போலிகள் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் இந்தியா மற்றும் துருக்கியில் அதிகமான அளவில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த DEFITELIO மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் WHO எச்சரிக்கையில் […]
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித இனம் இப்போது மிகப்பெரிய அல்லாட்டத்திற்கு ஆளாகியுள்ளது. தேவையற்ற சபலம் மற்றும் முற்றிலுமான செக்ஸ் ஆசைக் குறைபாடு என்ற இரண்டு எல்லைகளுக்கு இடையில் நாம் இருக்கிறோம். சமூக வலைதளங்கள், ஆபாச வீடியோக்கள் மனிதர்களின் செக்ஸ் உந்துதலில் தேவையற்ற அழுத்தங்களை அளிக்கிறது. இன்னொருபக்கம் மோசமான உணவு வழக்கம் மற்றும் உறக்கச் சுற்று மனிதர்களின் சாதாரண செக்ஸ் வாழ்க்கையையே கடினமாக்கி உள்ளது. இந்த இரண்டு அதீத நிலையும் சரிசெய்யப்பட வேண்டியுள்ளது. எலிகளின் மீதான புதிய […]
பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு எந்த தலைமுறையும் தாண்டி இப்போது அதிகமாக உள்ளது. பெரிய ஐடி கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களில் இருந்து அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள் வரை கஞ்சா பயன்பாடு தலை விரித்தாடுகிறது. ஜாயிண்ட், டொப்பி என்று பட்டப் பெயர்கள் வைத்து அழைக்கப்படும் கஞ்சா உடலில் உலோக நஞ்சைக் கலக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமீபத்திய ஆய்வில், கஞ்சா பயன்படுத்தாதவர்களைக் காட்டிலும் கஞ்சா பயன்படுத்துபவர்களின் இரத்தத்திலும் சிறுநீரிலும் ஈயம் மற்றும் […]