fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் தொழில்நுட்பம்

இருபதாயிரம் ஆண்டுகள் பூமியில் உங்களால் உயிர் வாழ முடியுமா? ஆச்சரியமான ஆய்வு முடிவுகள்!

வயதாவதைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் இதனால் மனிதர்கள் ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ முடியும் எனவும் மூலக்கூறு பயோ ஜெரொண்டோலஜித் துறையின் பேராசிரியர் மாகல்ஹேஸ் கூறுகிறார். இதெல்லாம் சாத்தியமா, சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்கிறீர்களா? ஆனால் அந்தப் பேராசிரியர் இதை உறுதியாகக் கூறுகிறாரே. வாருங்கள் அவர் என்னதான் கூறுகிறார் எனப் பார்ப்போம். 

இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு ஜெரொண்டோலஜித் துறையின் பேராசிரியர் மாகல்ஹேஸ் மனிதனின் முதுமையை உருவாக்கக் கூடிய காரணிகள் பற்றி விளக்கியபோது ஒரு மனிதனின் ஆயுளை ஆயிரம் ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். செல்லுலார் மட்டத்தில் முதுமையை நீக்கி, டிஎன்ஏவைச் சரி செய்து, முற்றிலும் மாறுபட்ட முதுமைச் செயல்முறைக்கு செல்களை மறுபதிப்பு செய்யலாம் என்கிறார். ஆனால் அதற்கான தொழில்நுட்பம் இன்னும் உருவாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மனிதர்களின் டிஎன்ஏவில் கணினி போன்று நிரல்களில் சிக்கலான தொகுப்பு உள்ளது எனவும்  அதுவே அவர்களை வயதானவர்களாக மாற்றுகிறது எனவும் கூறுகிறார் அவர். மருத்துவம் எத்தனையோ நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடித்து மனிதனின் ஆயுளை நீட்டித்திருக்கிறது. அதுபோல வயதாவதற்கான முக்கிய செல்கள் மற்றும் மரபணுக்களை மறுபிரசுரம் செய்வதன் மூலம் வயதாவதைத் தடுப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும் என்கிறார் அவர். 

மாகல்ஹேஸ் தனது ஆராய்ச்சியில் 200 வருட ஆயுட்காலம் கொண்ட வில்ஹேட் திமிங்கலம் மற்றும் 30 ஆண்டுகள் வாழக்கூடிய மோல் எலி ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளார். மனிதர்களைப் போலவே மற்ற விலங்குகளும் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அவை அந்தப் பிரச்சினைகளை சமாளித்து நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு வெவ்வேறு மூலக்கூறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. அதாவது வில்ஹேட் திமிங்கலங்கள் அவற்றின் டிஎன்ஏவை பழுது பார்த்துக் கொள்கின்றன. அதன் நீண்ட ஆயுளுக்கு பி53 மரபணு மற்றும் அதன் புற்றுநோயை அடக்கும் திறன் ஆகியவை முக்கிய பங்களிக்கின்றன. மோல் எலிகளும் ஒட்டுமொத்த முதுமையான டிஎன்ஏ சேதத்தைத் தாங்களாகவே சரிசெய்து கொள்கின்றன.  மனிதர்களில் பிற மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். அவை மனித உயிர்களை மறு வடிவமைக்கும் திறன்களை கொண்டிருக்கலாம் எனவும் புற்றுநோயை நீக்குவதற்கும் மரபணுக் குறியீட்டின் தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தவிர்ப்பதற்கும் மனிதனின் உயிரியலில் மறுவடிவமைப்பு செய்யவேண்டும் என்றும் அப்படி மனித முதுமையைக் குணப்படுத்த முடிந்தால் சராசரி மனித ஆயுட்காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் விபத்துக்கள் மற்றும் வன்முறை மரணங்கள் நிகழாமல் இருந்தால் அதிகபட்சமாக 20 ஆயிரம் ஆண்டுகள் வரை அவர்கள் வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரியின் செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்பவை என்பதுதான் இந்த அறிவியலின் அடிப்படை.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஜஸ்டின் வெர்பில்,  யானிர் பார்-யாம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டோனால்ட்  இங்க்பெர் ஆகியோர் கணினி உதவியுடன் சிமுலேஷன் முறைப்படி உயிரியின் உயிரியல் ஆயுள் தேர்வு எப்படி நடைபெறுகிறது என ஆராய்ச்சி செய்துள்ளார்கள். எதிர்காலச் சந்ததிகளுக்கு இயற்கை வளங்களை விட்டு வைக்கும்படியான பரிணாமத்தின் மரபணு ஏற்பாட்டின் வடிவமே முதுமை என்கிறது அவர்களது ஆய்வு. பரிணாம வளர்ச்சி ஏற்படுத்தியதே ஆயுள் வரம்பு என்றும் முதுமை என்பது உடலின் குணப்படுத்த முடியாத தேய்மானம் அல்ல என்றும் அவர்களது ஆய்வு தெரிவிக்கிறது. முதுமையும் ஒரு நோய்தான் என்பதையே அது தெரிவிக்கிறது. ஆக முதுமையையும் மருத்துவம் மூலம் விரட்டலாம். முதுமையைத் தூண்டும் மரபணுக்களின் செயல்பாட்டை நிறுத்தி, மனித ஆயுளைப் பலமடங்கு அதிகரிக்கலாம் என்பதே அவர்களது கூற்று. 

டர்ரிடோப்சிஸ் டோஹ்ரினி எனும் ஒரு வகை ஜெல்லி மீன் முட்டை இடும் பருவத்தில் தன்னைத்தானே மறுபடியும் குழந்தை நிலைக்கு மாற்றிக் கொள்கிறதாம். டர்ரிடோப்சிஸ் நியூட்ரிகுலா என்னும் மற்றொரு வகை ஜெல்லி மீன் தன்னை மீண்டும் மீண்டும் இளமையாக்கிக் கொள்கிறதாம். எதிரிகளை வேட்டையாடும்போதோ நோய்வாய்ப்பட்டோ இறந்தாலே தவிர, இந்த ஜெல்லி மீன்கள் சாவதில்லை என்கிறார்கள். பல பாக்டீரியாக்கள் பூமியில் இறப்பதே இல்லை என்பது அறிவியல் சொல்லும் விஷயம்.

 சுமார் இரண்டு லட்சம் ஆண்டு கால மனிதப் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் மனிதனின் சராசரி ஆயுள் 30 ஆண்டுகளைத் தாண்டியது சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்கிறார்கள் ரேஸில் மற்றும் சங்ஹி லீ என்னும் ஆராய்ச்சியாளர்கள். 2011இல் இந்தியரின் சராசரி ஆயுள் 66.8 ஆண்டுகள். ஜப்பானில் இது 82 ஆண்டுகள். ஆப்பிரிக்காவின் சுவாசிலாந்தில் சராசரி ஆயுள் வெறும் 31.99 ஆண்டுகள்தான். எனவே தற்போது மரபணுக்களை மாற்றம் செய்து மரணத்தையும் முதுமையையும் தள்ளி வைத்து மனிதரின் ஆயுளைக் கூட்ட முடியும் என்னும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு மிகவும் வியப்பைத் தருகிறது. சாகாவரம் இல்லை என்றாலும் மனிதனின் ஆயுளைப் பல மடங்கு அதிகரித்து  இந்தப் பூமியில் வாழ வைக்க முடியும் என்பது மனித குலம் இதுவரை அறியாத மற்றும் அரிய விஷயம்தான். ஆனால் ஒருநாள் நிச்சயம் இது நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள்  உறுதியாகக் கூறுகிறார்கள். அந்த நாள் எந்த நாள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை நாம் ஆயுளுடன் இருக்க வேண்டும். என்ன சரிதானே? 

தொடர்புடைய பதிவுகள் :

பருவனிலை மாற்றத்தை சமாளிக்க புதிய வழிமுறை : முயல்கிறது ஒரு புதிய நிறுவனம்
இ-சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 30 நாட்களில் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்!  எச்சரிக்கும...
பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டு...
மனித உடலில் மெல்லக் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உங்கள் மூளைக்குள்ளும் செல்லும் பிளாஸ்டிக் க...
குட்டித் தூக்கம் உடலுக்கும் மூளைக்கும் நல்லதென்று தெரியுமா உங்களுக்கு?
மது அருந்துதல் 60க்கும் மேற்பட்ட நோய்களிற்கு காரணம்: ஆய்வு
பாலியல் வன்முறையிற்கும் மது பயன்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு : ஆய்வு
மூளை மையங்களைத் தூண்டுவதன் மூலம் நோயாளியை மருந்துகளின்றி மயக்கத்தில் ஆழ்த்த இயலும்! ஆய்வு சொல்லும் அ...
உயிரினப் பேரழிவு ஏற்பட உண்மையான காரணம் என்ன? ஆய்வு தரும் தகவல்
சமூக வலைதளங்களில் விழும் விட்டிலாய் வளர்கின்ற இளைய தலைமுறையினரின் மனநலனை காக்க உதவும் 30 நிமிட டெக்ன...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *