fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம் வர்த்தகம்

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறுகிறதா?

2021 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை ஆசியாவின் ‘பவர் ஹவுஸ்’ என்று அறியப்படும் இந்தியா பெற்றுள்ளது. வரும்  2075 ஆம் ஆண்டுக்குள் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது விளங்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மையின் விளைவாக உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருவது கண்கூடு. உலகளவில் மிகப் பெரும் பொருளாதார மதிப்பினைக் கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக முறையே சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தப் பட்டியலில் பத்து வருடங்களுக்கு முன் இந்தியா பதினோராவது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சவுகான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மிகப் பெரும் பொருளாதார நாடாக உருவாகின்றதா? சற்று விரிவாய் அலசுவோம்.

பெரும் பொருளாதார மதிப்பினைக் கொண்டிருக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவின் ரூபாயின் தற்போதைய மதிப்பு குறைந்த போதிலும் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்போடு ஒப்பிடும் போது அது வலுவாகவே உள்ளது என அறியப்படுகிறது.

கோல்ட்மேன் சாக்ஸ் ரிசர்ச்சின் இந்தியப் பொருளாதார நிபுணர் சாந்தனு சென் குப்தா என்ன கூறுகின்றார் தெரியுமா? “அடுத்த இரண்டு தசாப்தங்களில் பிராந்தியப் பொருளாதாரங்களில் இந்தியாவின் சார்பு விகிதம் மிக மிகக் குறைவாக இருக்கும்” என்கிறார். மேலும் “இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் தொகை என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம். எனவே உற்பத்தித் திறனை அதிகரிப்பது, உள்கட்டமைப்பின் வளர்ச்சியைத் தொடர்வது, தொடர்ந்து சேவைகளை அளிப்பது ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்துவது சரியான பாதையில் அதைக் கொண்டு செல்லும்” எனவும் அதேவேளையில் அதிகமான மக்கள் தொகை மட்டுமே இந்தியாவின் ஜிடிபியை இயக்கும் நேரடிக் காரணியாக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அதன்படி புதுமைகளைப் புகுத்துவதும் தொழிலாளர் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் மட்டுமே இப்போது இந்தியாவுக்கு முக்கியமானது. மூலதன முதலீடும் முன்னோக்கிச் செல்லும் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க உந்துதலாக இருக்கும். இந்தியாவில் தற்போது பெருமளவில் உள்கட்டமைப்பு உருவாக்கம் நடைபெற்று வருகிறது. முதன்மையாக, சாலைகள் மற்றும் ரயில்வே ஆகியவற்றின் அடிப்படையில் உள்கட்டமைப்பை அமைப்பதில் இந்திய அரசின் கவனம் இருக்கிறது. ஆக, தனியார் துறைக்கு உற்பத்தி மற்றும் சேவைகள் ஆகிய இரண்டிலும் திறன்களை உருவாக்குவதற்கு இது மிகப்பொருத்தமான நேரம் என்றும் புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும் அவர் கூறுகின்றார்.

இன்னொரு பக்கம் இந்தியப் பொருளாதாரத்தின் டிஜிட்டல் மயமாக்கல் மிகப்பெரும் பாய்ச்சலை எடுத்துள்ளது. ஆதார் என அழைக்கப்படும் மிகப்பெரிய பயோமெட்ரிக் ஐடியின் மூலமாக 1.4 பில்லியன் மக்கள் தொகையின் அடையாளத்தை அது  சரிபார்க்கிறது. இது கடன் நிகரத்தை விரிவுபடுத்துகிறது. அதாவது சிறு வணிகங்களுக்கு அதிகக் கடன் பெற வழிவகுக்கிறது. இந்தியச் சேவைகளின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. இது நடப்புக் கணக்கு நிலுவைகளை ஓரளவு தணிக்கிறது. இருப்பினும் பொருள்களின் விலைகள், பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு சமநிலையின்மை போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்துவதை இந்திய அரசு கவனத்தில் கொண்டால் அசுர வளர்ச்சி சாத்தியமாகும் என்று சொல்லப்படுகின்றது.

பசுமை ஆற்றல் மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு  ஒரு நல்வாய்ப்பாக இருக்கும். அதற்கேற்றார்போல் 2070க்குள் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டுவதையும், 2030க்குள் ஐம்பது சதவீத மின் உற்பத்தித்திறன் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து கிடைப்பதையும், 500 GW புதுப்பிக்கத்தக்க அல்லது தூய்மையான உற்பத்தியை எட்டுவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது இந்தியா. மேலும் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கும் மற்றும் பச்சை ஹைட்ரஜனுக்கும் அது  முக்கியத்துவம் அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. “இந்தியாவில் தயாரிப்போம்” (மேக் இன் இந்தியா) முன்னெடுப்பின் கீழ் தொழில்களுக்கான உரிமைகளைப் பெறுவது தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீட்டு வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கான வாய்ப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

விவசாயம், சிறுதொழில்கள், ஒழுங்கமைக்கப்படாத வணிகத்துறை, சமூகத்தின் சிறுபான்மை மற்றும் பின்தங்கிய மக்கள் போன்றவை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொண்டால் நிச்சயமாக அவை இந்தியாவை உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றும் என்பதில் ஐயமில்லை என்கின்றார்கள் ஆய்வாளர்கள். மொத்தத்தில், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருப்பதி பாலாஜி கோயில்கள்! பான்-இந்தியா கடவுளாகும் வெங்கடாஜலபதி!!
வெண்பா: தமிழ்க் கலாச்சாரத்தோடு கூடிய சமையல் வீடியோ விளையாட்டு
அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைத...
இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் சீராகி வருகின்றன - ஜூலை மாதத்தில் அதன் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக கு...
படங்களின் மூலம் தரவுகளைத் திருடும் ஆபத்தான புதிய ஆண்ட்ராய்ட் மால்வேர்
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கை! வெறும் எண்களாக பார...
அமெரிக்காவில் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிப்பு - அமெரிக்க சட்டமன்றத்தின் உதவி...
இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
இந்தியாவின் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *