fbpx
LOADING

Type to search

உலகம் சிறப்புக் கட்டுரைகள் தொழில்நுட்பம் பல்பொருள்

ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் : பிரிட்டனில் என்னென்ன பண்றாங்க பாருங்க!

working from home

செய்தி சுருக்கம்:

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் எந்த அலுவலகமும் இயங்க முடியாத நிலை இருந்தது. பின்னர் சமூக விலக்கத்தைக் கடைப்பிடிக்கும்வண்ணம் வீட்டிலிருந்தே வேலை செய்யும் ‘ரிமோட் ஒர்க்கிங்’ முறை அறிமுகமானது. தற்போது பல நிறுவனங்களில் வாரத்தின் சில நாள்கள் அலுவலகத்திற்கு வருவதும், மீதி நாள்கள் வீட்டிலிருந்தும் பணிபுரியும் ‘ஹைபிரிட்’ முறை புழக்கத்தில் உள்ளது. பிரிட்டனில் வீட்டிலிருந்து பணிபுரிகிறவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ஹைபிரிட் ஒர்க்கிங் முறை என்பது யுனைட்டம் கிங்டம் என்னும் ஐக்கிய ராஜ்யத்தின் பண்பாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. உலகமெங்கும் உள்ள நிறுவனங்களில் அலுவலகரீதியாக பெருந்தொற்று காலம் என்பது முடிவடைந்துவிட்டாலும் பணியாளர்கள் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய விரும்பவில்லை. ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் என்னும் வீட்டிலிருந்து பணிபுரிவதையும், ஹைபிரிட் என்னும் வீட்டில் பாதி; அலுவலகத்தில் மீதி என்னும் முறையையும் பணியாளர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரிகிறவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வில் பல்வேறு ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. அலுவலகத்தில் இருக்கும்போது வேறு மனநிலையும், வீட்டில் இருக்கும்போது வேறு மனநிலையும் இருக்கும் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி பிரிட்டனில் ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்து பணிபுரிகிறவர்களில் பத்தில் ஒருவர் செக்ஸ் உறவில் ஈடுபடுகின்றனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பின்னணி:

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘ரிமோட் ஒர்க்’ என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. தகவல் தொடர்பு வசதிகள் குறைவாக இருந்த காரணத்தினால் ரிமோர் ஒர்க் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது. குறிப்பாக, நிறுவனத்தை நடத்துகிறவர்கள், பணியாளர்கள் தொலைவில் இருந்தால் உற்பத்தி திறன் பாதிக்கப்படும் என்று கருதினர். ஆனால், பெருந்தொற்று பாதிப்பானது பணியாளர்கள் இருக்குமிடத்திலே வேலை செய்ய முடியும் என்பதை நிரூபித்தது.

செயல்பாட்டில் முன்னேற்றம்

2020 மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் பொதுவாக இதுபோன்று ‘ரிமோட் ஒர்க்’ செய்தவர்களின் உற்பத்தி திறன் 47 சதவீதம் கூடியிருந்ததாக ஓர் அறிக்கை கூறுகிறது. மின்னஞ்சல் பகிர்வு 57 சதவீதமும், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல் 230 சதவீதமும், ‘சாட்’ போன்று வேறு வகையில் தொடர்பு கொள்தல் 9 சதவீதமும் அதிகரித்திருந்தது.
வேலையில் திருப்தி

2022ம் ஆண்டு பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் 25,000 ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தளர்வான பணிச்சூழலையே பலர் விரும்புவது தெரிய வந்தது. அதிக ஊதியம் மற்றும் வேலை நேரம், முன்னேற்ற வாய்ப்புகளுக்கு அடுத்து பணியாளர்கள் வேறு வேலை தேடுவதற்கான மூன்றாவது காரணமாக ஃபிளக்ஸி ஒர்க் என்விரான்மெண்ட் என்னும் தளர்வான பணிச்சூழல் விளங்குகிறது. 87 சதவீத ஊழியர்கள் ரிமோட் ஒர்க்கையே விரும்பியதாக 2022ம் ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டு கணக்கெடுப்பில் 91 சதவீதம் ஊழியர்கள் ரிமோட் ஒர்க்கை விரும்புவதாக கூறப்படுகிறது.

வேலைக்கும் வாழ்க்கைக்குமான சமநிலை

ஊழியர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்வதால், அலுவலக நேரம் மற்றும் வாழ்வியல் பணிகளுக்கான நேரத்தின் சமநிலை பேணப்படுகிறது. தங்களுக்கு வசதியான நேரத்தில் வேலையை ஆரம்பித்து, செய்யக்கூடிய நேரம் வரைக்கும் செய்வதால் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது. அலுவலகத்திலேயே விழுந்துகிடக்காமல் வீட்டில் இருப்பதால், போக்குவரத்திற்கு செலவாகும் நேரம் மிச்சமாகி, குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறது. பிள்ளைகளை பள்ளிகளுக்கு சென்று விடவும், அழைத்து வரவும் இயலும்.

பலருடைய மன அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல், வாகனத்திற்காக காத்திருத்தல், வாகனத்தில் சிக்னலுக்காக காத்திருத்தல் போன்றவற்றை தவிர்த்து, சமாதானமாக வாழ முடியும்.

ஒர்க் ஃப்ரம் ஹோம் வேடிக்கைகள்

வீட்டிலிருந்து வேலை செய்வது புதிதான ஒரு பழக்கம். வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் அதிகாரிகள் அல்லது குழுவினருடன் இணையவழியில் சந்திப்பது வழக்கம். தங்கள் முன் ஒரு காமிரா இருக்கிறது; அதன் வழியாக அலுவலகத்தை சேர்ந்த அனைவரும் தன்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வும், தன்னுடைய ஒலிவாங்கியை (மைக்) அணைத்துவைக்காவிட்டால், வீட்டில் பேசும் எல்லா விஷயங்களும் அனைவருக்கும் கேட்கும் என்ற உணர்வும் எப்போதும் எல்லோருக்கும் இருப்பதில்லை. அதனால் பல வேடிக்கை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏபிசி என்ற செய்தி நிறுவனத்தை சேர்ந்த வில் ரீவ் என்ற செய்தியாளர் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் தோன்றி செய்தி தொகுப்பை அளித்தார். வீட்டில்தானே இருக்கிறோம் என்று அவர் முறையான கால்சட்டை அணியாமல் மேலே கோட் மட்டும் அணிந்திருக்கிறார். ஆனால், அவர் காமிராவின் கோணம் தன் தொடை வரைக்குமான பாகத்தை காட்டுகிறது மறந்துபோனார். ஆகவே, அவர் மேலே கோட் அணிந்து கீழே அதற்கான முழு கால் சட்டை அணியாமல் இருந்ததை பார்த்த அனைவரும் அதிர்ந்துபோயினர்; அவர் வேடிக்கை பொருளாகிவிட்டார்.

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் ஒரு வீடியோ பரவலாக பகிரப்பட்டது. அலுவலக மெய்நிகர் சந்திப்பில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் வீட்டிலிருந்து பணியாற்றியபடியினால், அவர் மனைவி அந்த அறைக்குள் வருகிறார். நேராக கணவரிடம் வந்தவர், குனிந்து கணவரை முத்தமிட முயற்சிக்கிறார். விலகிக்கொள்ளும் கணவர், தன்னுடைய மடிக்கணினியை காட்டி தான் மெய்நிகர் சந்திப்பில் இருப்பதை உணர்த்துகிறார்.
இதுபோன்று பல சம்பவங்கள் நடந்ததாக பலரும் வெவ்வேறு இடங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பிரிட்டனில் ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம்

பிரிட்டனில் ஒர்க்கிங் ஃபரம் ஹோம் குறித்து ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளளது. ஊழியர்கள் தங்கள் அலுவலக பொழுதில் நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது பொதுவாக காணப்படுகிறது. கடந்த ஓராண்டில் பிரிட்டனில் ஹைபிரிட் முறையில் வேலை பார்ப்போரில் 27 சதவீதத்தினர் இதைச் செய்வதாக கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் 21 சதவீதத்தினர் வீட்டின் தோட்டத்தை பராமரிப்பதாகவும், வீட்டில் வேறு வேலைகளைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். வேலை நேரத்தில் தூங்கி விடுவதாக 17 சதவீதத்தினர் கூறுகின்றனர். 16 சதவீதத்தினர் வீடியோ கேம் விளையாடுகிற நிலையில் ஐந்தில் ஒருவர் வேறு வேலைக்கு விண்ணப்பிப்பதாகவும், பத்துபேரில் ஒருவர் வீட்டில் தங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

பணியாளர்களின் நடத்தையில் அலுவலகம், வீடு இரண்டு இடங்களைச் சார்ந்தும் பெருத்த மாறுதல் காணப்பட்டாலும் பணித்திறன் பாதிக்கப்படவில்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வீட்டில் சில நாள்கள்; அலுவலகத்தில் சில நாள்கள் என்று ஹைபிரிட் முறையில் பணிபுரியும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கி...
1983  கறுப்பு யூலை படுகொலைகள்: 40 வருடங்களாக ஆறாத ரணம்…
அதிகத் திரைநேரம் குழந்தைகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்
ஓவியம் வரைவது எப்படி..?
ஓரல் செக்ஸ் (வாய்வழிப் புணர்ச்சி) கேன்சருக்கு வழிவகுக்கிறதா? உலகம் முழுவது இப்படி வாயால் கெட்டவர்கள்...
Threads செயலி அறிமுகம், சோசியல் மீடியாவிற்கு ஏன் இவ்வளவு போட்டி?
உக்ரைனுக்கு நேடோ உறுப்பினர் பதவி மற்றும் ரஷ்யாவிற்கு நெருக்கடி - லிதுவேனியா மாநாட்டில் என்னென்ன எதிர...
மூளை மையங்களைத் தூண்டுவதன் மூலம் நோயாளியை மருந்துகளின்றி மயக்கத்தில் ஆழ்த்த இயலும்! ஆய்வு சொல்லும் அ...
வெண்பா: தமிழ்க் கலாச்சாரத்தோடு கூடிய சமையல் வீடியோ விளையாட்டு
ட்விட்டரை சாய்க்கத் தயாராகும் மெட்டா!  கயிறை (த்ரெட்ஸ்)  இழுக்கத் தயாராகுங்கள்!!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *