கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கிலோ சரக்கு..!!

செய்தி சுருக்கம்:
யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 130 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கஞ்சா கேரளாவிலிருந்து கடத்தப்படுள்ளது தெரியவந்துள்ளது.
பின்னணி:
படகு மூலம் கடத்தப்பட்டு வந்த கேரள கஞ்சா 61 பார்சல்களில் 3 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. ரூ. 43 மில்லியன் என கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, கேரள கஞ்சா கையிருப்பு, படகு மற்றும் சந்தேக நபர் முதலில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் உடுத்துறையைச் சேர்ந்த 44 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.