Walnut Tamil Meaning

வால்நட் என்ற டிரை ஃப்ரூட்ஸுக்குத் தமிழில் என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதற்கு இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.
அங்கு செல்லுமுன், டிரை ஃப்ரூட்ஸ்பற்றி நாம் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்.
நன்மைதரும்டிரைப்ஃரூட்ஸ்
இப்போதெல்லாம் டிரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர்பழங்கள் மிகுதியாகக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைகளில், இணையத் தளங்களில், மொபைல் செயலிகளில் என்று பலவிதமாக இவற்றை வாங்கலாம். முந்திரி, பாதாம், உலர்திராட்சை போன்ற பலவும் இந்த வகையில் வருகின்றன. இவற்றில் பலவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதாகச் சொல்கிறார்கள். இவற்றைத் தனியாகச் சாப்பிடுகிறவர்கள் சிலர், பாயசம், மற்ற இனிப்புகளில் சேர்க்கிறவர்கள் பலர். இவற்றின் விலை மிகுதியாக இருந்தாலும், சுவை பிரமாதமாக இருப்பதாலும் உடலுக்குப் பல நன்மைகளைக் கொண்டிருப்பதாலும் அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள்.
உண்மையில், குறைந்த விலை டிரை ஃப்ரூட்ஸும் இங்கு கிடைக்கின்றன. ஆனால், விலைக்கு ஏற்றபடி அவற்றில் தரமும் குறைவாக இருக்கும். அதனால், நமக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைக்கிற நல்ல டிரை ஃப்ரூட்ஸை வாங்கிச் சாப்பிடலாம்.
இதில் இன்னொரு வசதி, சிறிய, மிகச் சிறிய பாக்கெட்களில் தொடங்கி 1 கிலோ அளவில்கூட இவை கிடைக்கின்றன. அதனால், மொத்தமாகச் செலவழிக்காமல் நமக்குத் தேவையான அளவில் வாங்கிக்கொள்ளலாம். உப்பு, காரம், இன்னும் பல சுவைகளில் இவை கிடைப்பதால் குழந்தைகளையும் ஒரு நல்ல உணவுப் பழக்கத்துக்கு அறிமுகப்படுத்தலாம்.
வால்நட்
டிரை ஃப்ரூட்ஸ் வகையில் புகழ் பெற்றிருக்கும் ஒன்று, வால்நட் அல்லது வால்னட். கடினமான மேல்தோலைக் கொண்ட இந்த வால்நட்டை உடைத்துச் சாப்பிடவேண்டும். நமக்கு அந்தச் சிரமம் கொடுக்காமல் உள்ளிருக்கும் பருப்பைமட்டும் பிரித்து எடுத்து விற்கிறவர்களும் உண்டு.
வால்நட் பார்ப்பதற்கு மூளையைப்போன்ற வடிவத்தில் உள்ளது, அதைச் சாப்பிடுவதால் மூளை, அதாவது, சிந்தனை ஆற்றல் மேம்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
தமிழில்வால்நட்
வால்நட் என்று சொன்னால் பெரும்பாலானோருக்குத் தெரியும். எனினும், இதைத் தமிழில் எப்படி அழைப்பது என்று தெரிந்துகொள்ளப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மையில் வால்நட்டுக்குப் பல ஆண்டுகளாக நன்கு புகழ் பெற்ற ஒரு தமிழ்ப் பெயர் இருக்கிறது: வாதுமைக்கொட்டை.
தமிழகக் கடைகளில் வால்நட் பொட்டலங்களில் பெரும்பாலும் ஆங்கிலப் பெயர்கள்தான் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாமுழுவதும் இருக்கிற நிறுவனங்கள் இந்தப் பொட்டலங்களைத் தயாரித்துச் சந்தைப்படுத்துவதால் அவர்கள் ஆங்கிலப் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடுவதைத்தான் விரும்புகிறார்கள். அதனால், வாதுமைக்கொட்டை என்ற பெயரில் கடை அலமாரிகளிலோ இணையத்தளத்திலோ தேடினால் பெரும்பாலும் கிடைக்காது. வால்நட் என்ற பெயர்தான் அங்கு வசதியாக இருக்கும்.
எனினும், இப்போது உள்ளூர்மயமாக்கல் எனப்படும் மொழிபெயர்ப்புகள் பரவலாகிவருகின்றன. கேஷ்யூநட் என்ற டிரை ஃப்ரூட்ஸின் பெயர் முந்திரி என்று பரவலாகப் பயன்படுத்தப்படுவதுபோல் வால்நட் என்ற பெயரும் வாதுமைக்கொட்டை என்று பயன்படுத்தப்படுகிற சூழ்நிலை வரக்கூடும். ஆங்கிலம் தெரியாத மக்களும் இதுபோன்ற பொருட்களைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துகிற சூழ்நிலையை இது உண்டாக்கும்.
உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கடைக்காரர்களிடமெல்லாம் வாதுமைக்கொட்டை என்ற சொல்லை அறிமுகப்படுத்துங்கள். பலரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கும்போது அது இயல்பாகப் பரவும். இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற பல்வேறு தமிழ்ச்சொற்கள் இப்படிப் பரவலாக அறிமுகமானவைதான்.
வால்நட் என்று சொன்னாலும் சரி, வாதுமைக்கொட்டை என்று சொன்னாலும் சரி, டிரை ஃப்ரூட்ஸைச் சாப்பிட்டு நம் உடலின் நலத்தைப் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதில் ஐயமில்லை.