
‘Vlog’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
‘Vlog’ உச்சரிப்பு= வ்லோக்
Vlog meaning in Tamil
‘Vlog’ என்பது வீடியோ லோக் என்பதன் பெயர் சுருக்கம் ஆகும். இதை வீடியோ ப்லோக் என்றும் கூறலாம்.
‘Vlog’ என்ற சொல் அடிப்படையில் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல்) இருப்பினும் இது ‘verb’ (வினைச்சொல்) ஆகவும் செயல்படுகிறது.
Vlog-(Noun) தமிழ் பொருள்
ஒரு வகை காணொளிப் பதிவு
காணொளி வலைப்பதிவு
இணையதள காணொளிப்பதிவு
நிகழ்வுகளின் பகுப்பாய்வுக் காணொளி
வீடியோ வலைப்பதிவு
Vlog-(verb) தமிழ் பொருள்
காணொளிப் பதிவு இடுதல்
இணையதளத்தில் காணொளிப் பதிவு இடுதல்
காணொளி மூலம் தம் எண்ணம் அல்லது செயல்பாட்டை வெளியிடுதல்
Vlog-noun (பெயர், பெயர்ச்சொல்)
1. ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்களைக் கொண்ட காணொளிப் பதிவு.
2. பயணம் மேற்கொள்பவர் அவர் பயணித்த இடத்தின் சிறப்புகள், முக்கிய அல்ல அறிய தகவல்கள், அங்குள்ள தங்கும் வசதிகள் பற்றிய vlog வெளியிடுவர்.
3. உணவு பதிவர்கள் உணவு பதார்த்தங்களின் செய்முறை விளக்கம் அல்லது உணவு விடுதிகள் பற்றிய vlog வெளியிடுவர்.
4. தொடர்புடைய வார்த்தைகள் – Vlogumentary = Vlog+documentary; video diarists = வீடியோ பதிவுகளை தொகுத்து வைத்திருப்பவர்.
‘Vlog’ என்ற வார்த்தையின் எடுத்துக்காட்டுகள் (Examples) கீழே உள்ளன.
Example (உதாரணம்):
English: That is my Vlog on beauty.
Tamil: அது என் அழகு பற்றிய வ்லோக் ஆகும்.
English: Where can I watch your Vlog videos?
Tamil: உங்கள் வ்லோக் காணொளிகளை நான் எங்கு பார்க்கலாம்?
Vlog-verb (வினைச்சொல்)
1. Vlog என்ற பெயர்சொல் காலப்போக்கில் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது.
2. ‘Vlog’ காணொளிகளை வெளியிடுவது ஒரு தொழிலாக உள்ளது. அத்தொழிலை செய்பவரை வ்லோக்கர் அல்லது ஸ்ட்ரீமர் என்று அழைப்பர்.
3. தொடர்புடைய வார்த்தைகள் – Vlogging, Streaming.
Examples:
English: I am currently Vlogging as a part-time profession.
Tamil: நான் தற்போது பகுதி நேர தொழிலாக வ்லோக்கிங் செய்கிறேன்.
English: I have plans to Vlog about stress and mental health.
Tamil: நான், மன அழுத்தம் மற்றும் மனநலம் பற்றி வ்லோக் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்
‘Vlog’ இன் சில வகைகள்
Food Vlog= உணவைப் பற்றிய வீடியோ லோக்.
Travel Vlog= பயணங்களைப் பற்றிய காணொளிப்பதிவு.
Nature Vlog= இயற்க்கையைப் பற்றிய காணொளிப்பதிவு.
Personal Vlog= தனிப்பட்ட ஒரு நபர் உருவாக்கிய Channel (சேனல்) அல்லது Account (அக்கவுண்ட்) டில் வெளியிடப்பட்டவை.
Business / commercial Vlog= ஒரு நிறுவனத்தின் Channel (சேனல்) அல்லது Account (அக்கவுண்ட்) டில் வெளியிடப்பட்டவை.
Motivational Vlog= ஊக்கமளிக்கும் காணொளிப்பதிவுகள்.
Live Streaming Vlog = நேரடியாக ஒளிபரப்பாகும் காணொளிப்பதிவுகள்.
‘Vlog’ Synonyms-antonyms
‘Vlog’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு.
Video blog
Video log
Video Weblog
Video Web log
‘Vlog’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொற்கள் (Antonyms) ஏதும் கிடையாது.