fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Virtual Meaning in Tamil

 Virtual- விருச்சுவல்

பொருள்:

உண்மையாக இருப்பது போல் பிரதிபலிக்கும் ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்காது,மெய்நிகர், செயல்திறன், தோற்ற நிலை, கற்பனை ,இணைய ,வீரம்.

 விளக்கம்:

 ஒரு கணினி மூலம்  மேற்கொள்ளப்பட்டது, அணுகப்பட்டது அல்லது சேமிக்கப்படுகிறது. அதாவது உண்மை இல்லாத ஒன்று கணினி மென்பொருளினால் இருப்பதாக தோற்றுவிக்கப் படுவது. குறிப்பிட்ட தன்மைக்கும் நிலைக்கும் அருகில் உள்ளது போல் பிரதிபலிக்கும், ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்காது.

Synonyms: ஒத்த சொற்கள்

     Effective, simulated, practical, similar (பயனுள்ள, உருவகப்படுத்தப்பட்ட, ஒத்த)

Antonyms: எதிர்ச்சொற்கள்

            Actual, real, authentic, true ( உண்மையுள்ள, நிஜமான)

 உதாரணங்கள்:

Anyone can learn in the virtual environment today

• மெய்நிகர் எதார்த்தம் மூலமாக கற்க நினைக்கும் எவர் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் 

 virtual technologies are used maximum in cinefield.

 •மெய்நிகர் எதார்த்தம் அதிகம் பயன்படுத்தப்படும் இடம் திரைப்படத் துறை ஆகும்

You can find virtual images of the destination by searching the websites before traveling. If we are planning to go on a trip, it is very helpful to make a schedule in advance, starting from where to go, where to stay, what places to see and the nature of the place.

 சுற்றுலா செல்லும் முன் வலைத்தளங்களில் தேடினால் செல்லும் இடத்தின் மெய்நிகர் படங்களை காணலாம். சுற்றுலா செல்ல நாம் திட்டமிட்டால் எங்கே செல்வதில் தொடங்கி, தங்குவது, எந்த இடங்களை காண்பது, அந்த இடத்தின் தன்மை ஆகிய எல்லா அட்டவணையும் முன்பே செய்து முடிக்க மிக உதவுகிறது. 

Virtual educational environment has been built by technologies

• மெய்நிகர் கற்றல் வகுப்பறை ஆனது தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு நிறுவப்படுகிறது .

Students get quality education through virtual learning 

மெய்நிகர் வகுப்பறை மூலம்  மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறது.

As much as there are advantages, there are also some disadvantages. So it is better for students to handle it carefully and use it as needed.

எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில தீயவைகளும் இதில் இருக்கிறது. ஆகையால் மாணவர்கள் கவனமாக இதை கையாள்வதும் தேவைக்கு உபயோகித்தலும் சிறந்தது.

Job opportunities are increased by virtual machines. Technology gives everyone a different experience. It is only with virtual technology that everyone can know many things. Searching for a thing and acquiring knowledge of it is made easy by virtual.

மெய்நிகர் இயந்திரங்களால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவத்தை அளிக்கிறது. மெய்நிகர்  தொழில்நுட்பத்தால் மட்டுமே எல்லோரும் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளமுடிகிறது .ஒரு விஷயத்தை தேடி அலைந்து தெரிந்துகொள்வது மெய்நிகரால் எளிமை ஆக்கப்படுகிறது.

Virtually everything we can think of, starting from buying a product to getting to know its users and comparing it with other products, is possible.

 ஓர் பொருளை வாங்குவதில் தொடங்கி அதை உபயோகப்படுத்துவர் கருத்தை அறிந்து கொள்ளுதல் மற்றும் அதை மற்ற பொருட்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என நாம் நினைக்கும் அனைத்தும் மெய்நிகரால் சாத்தியப்படும்.

It is possible to talk to anyone, see them, get medical help, get help from anyone, wherever we are. This technology helps if you still need to seek medical advice in dire situations. Help is always available anywhere. There are as many disadvantages as there are advantages. It can either  create or destroy a thing.

 நாம் எங்கிருந்தாலும் யாருடன் வேண்டுமானாலும் பேசிக் கொள்ள ,அவர்களை பார்க்க, மருத்துவ உதவி பெற என எந்த சூழ்நிலையையும் யாருடைய உதவியாவது பெற என அனைத்தும் சாத்தியம். இக்கட்டான சூழ்நிலையில் இருப்பினும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டுமெனில், இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. எங்கும் எப்பொழுதும் எந்த உதவியையும் சாத்தியப்படுகிறது. எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. ஒரு விஷயத்தை ஆக்கவும், அழிக்கவும் வல்லது. 

Another advantage is that they can use this virtual technology in their mother tongue.

 அவரவர் தாய் மொழியிலேயே இந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்த முடியும் என்பது இன்னொரு நன்மையாகும்.

 Among the beneficiaries of this technology are businessmen. Websites to attract customers on one hand, people who know the technology to create websites on the other hand, it facilitates employment opportunities and business on the other

 இந்த தொழில்நுட்பத்தால் அதிகம் பயன் அடைந்தவர் வரிசையில் வணிகர்கள் இடம்பெறுகின்றனர். வாடிக்கையாளர்களை கவர வலைத்தளங்கள், வலைத்தளங்களை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என ஒருபுறம் வேலைவாய்ப்பும் மறுபுறம் வியாபாரமும் செயல்படுகிறது.

space photography from the earth is possible only because of this.

பூமியிலிருந்து, மற்ற கோள்கள் மற்றும் விண்வெளியை புகைப்படம் எடுத்தல் என அனைத்தும் இதனால் மட்டுமே.

It is capable of saving people by knowing earthquakes and tsunamis beforehand.

 நிலநடுக்கம், சுனாமி போன்ற அழிக்கக்கூடிய அனைத்தையும் முன்பே அறிந்து மனிதர்களை காப்பாற்ற வல்லது இது.

Our image in the mirror is virtual, i.e. reflection.

Even the imagination we create when we read something is virtual.

கண்ணாடியில் தெரியும் நமது உருவம் மெய்நிகர் ஆகும், அதாவது பிரதிபலிப்பு.

நாம் ஒரு விஷயத்தை படிக்கும்போது செய்யும் கற்பனைக் கூட  மெய்நிகர் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் :

Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up