fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Vintage Meaning in Tamil

தமிழ் மொழியில் “வின்டேஜ்” என்ற சொல்லின் அர்த்தம் 

கீழ்வரும் எழுத்து விளக்கம், “vintage” என்ற ஆங்கிலச் சொல்லின் தோற்றம், பொருள் மற்றும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் எதனைக் குறிக்கும் என்பதன் விளக்கம் ஆகும்.

கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தோன்றிய பொருளைப்பற்றி கூறும்போது, அப்பொருளை “வின்டேஜ்” (vintage) என்று குறிப்பது உண்டு. அத்தகைய “வின்டேஜ்” பொருட்களின் முக்கிய அம்சம் என்னவென்று கேட்டால், அவை மிகவும் பழமை வாய்ந்ததாகவும், தனித்துவத்துடன் காணப்படுவதுமே ஆகும். பொதுவாக இத்தகைய பொருட்கள் குறைந்த பட்சமாக நாற்பது வருடத்திற்கு முன் தோன்றியதாக இருப்பது வழக்கம். பழையவனவற்றிற்கு மதிப்பதிகம் என்ற கூற்றிற்கு ஏற்ப இத்தகைய பொருட்களின் விலையும், தரமும் மிகுதியாக போற்றப்படுகின்றன.

முதன் முதலில், திராட்சைச் சாறை புளிக்க வைத்து செய்யப்படும் மது பானமான கிரேப் வைனின் தரத்தைக் குறிப்பதற்க்கே இந்த “வின்டேஜ்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை ஒட்டி, மிக உயந்த தரம் கொண்ட மது பானங்களும் அவ்வாரே அழைக்கப் பெற்றன. காலப்போக்கில் ஆடை, ஆபரணம், இசை, பாடல் தொகுப்பு என பழமையை சார்ந்து வரும் அனைத்து பொருட்கள் அல்லது விஷயங்களுக்கும் “வின்டேஜ்” (vintage item / material) என்ற முத்திரை இடப்பட துவங்கிற்று. இத்தகைய தொகுப்பில் இடம் பெரும் அனைத்து தயாரிப்பின் உருப்படிவமும், தோற்றமும் ஒரே காலகட்டத்தில் விளங்கியதாக இருக்கும்.

இக்கால கட்டத்தில், ஆடை, ஆபரண தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள், முன் ஒரு காலத்தில் பிரபலமாகத் திகழ்ந்து, தற்போது பழக்கத்தில் இல்லாத பாணியை “வின்டேஜ் கலெக்ஷன்” (vintage collection) என்று பெயர் சூட்டி மரு அறிமுகம் செய்வதை காண முடிகிறது. அந்த காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் நாவல்களும், “வின்டேஜ் கிளாஸ்சிக்ஸ்” (vintage classics) என்று கொண்டாடப்படுகின்றன.

வின்டேஜ் என்ற சொல்லின் பயன்பாடு / உதாரணங்கள்:

  1. வின்டேஜ் ஈரா (vintage era) – தரமான அனுபவங்கள் அல்லது சம்பவங்களைக் கொண்ட கடந்த காலம் (உதாரணமாக: 1920கள், 1940கள், 1980கள்).
  2. பழமையான  ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (vintage arts and crafts) – கடந்த காலத்தில் தோன்றிய பாணி அல்லது செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், பழம் பெருமை வாய்ந்த தஞ்சாவூர் ஓவிய பாணி
  3. பழமை வாய்ந்த கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் (Vintage architecture, sculptures and carvings) – மாமல்லபுரம் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் காணப்படுபவை, மைசூர் மாளிகை முதலியன.
  4. வின்டேஜ் கார் மற்றும் விமானம் (Vintage car and plane) – துவக்ககால மோட்டார் வாகன மற்றும் விமான மாதிரிகள். 
  5. பழங்கால தோற்றம் (vintage look) – 1920களின் அலங்கரிப்பு பாணி அல்லது பாங்கு
  6. வின்டேஜ் ஆடை (vintage dress)
  7. ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள விஷயங்கள் (vintage in nature)
  8. முக்கிய பருவம் (vintage season)

———————————————-முற்றும்———————————————–

தொடர்புடைய பதிவுகள் :

சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் தன்னுடைய எரிபொருள் விநியோகத்தை விரைவில் துவங்கவுள்ளது - இலங்கை ...
கருப்பை புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சை!
 உடலில் மென்மையான தசைநார்களை பெருக்கிக் கொள்வது அல்சைமர் நோயிலிருந்து நம்மை காக்கும்!-  ஆய்வு முடிவு...
Credit Meaning in Tamil
Logistics Meaning in Tamil
Obstructive Tamil Meaning| ‘Obstructive’ தமிழ் பொருள்
அதிபழமையான டைனோசர் எச்சங்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன தெரியுமா?
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
வெப்பமா? குளிரா? செக்ஸ் உணர்வை அதிகரிக்க எந்த சூழல் பொருத்தமானது..?! 
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up