இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்

செய்தி சுருக்கம்:
ஆக்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் தெரிவித்துள்ளார்
பின்னணி:
புகார் கொடுத்த சியாமளா யோகராஜா (56) என்பவர், அவர்கள் ஒரு திரைப்படத்திற்கான முதலீட்டாளர்களை தேடுவதை அறிந்த பின்னர் சில அறிமுகமானவர்கள் மூலம் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறினார்.
தி நகரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இருவரையும் செப்டம்பர் 23, 2018 அன்று சந்தித்த பின்னர்,
ரூ30 லட்சம் பணத்தை இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பண பரிமாற்ற வழிகள் மூலம் பல தவணைகளில் அனுப்பியுள்ளார்.
ஆனால், அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், அப்பெண்ணின் தொலைபேசி அழைப்புகளை அவர்கள் உதாசீனம் செய்துள்ளனர். அவர்களை வேறு வழிகளால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவர் போலீசில் புகார் செய்தார்.