Vice Versa Meaning in Tamil

Vice versa meaning in Tamil | தமிழில் எளிதான அர்த்தம்
Vice versa meaning in Tamil: இக்கட்டுரையில் ‘Vice Versa’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
‘Vice versa’ உச்சரிப்பு= வாஇஸ வர்ஸ
Vice versa meaning in Tamil
Vice versa, குறிப்பிட்ட வாக்கியம் எதிர்ரெதிர் மாறாக அல்லது நிலையெதிர் மாறாக வருவதே இதன் விளக்கம் ஆகும்.
Vice versa – இது ஓர் வினைஉரிச்சொல் (adverb) ஆகும்.
Vice versa தமிழ் பொருள்
- எதிரெதிர் மாறாக
- நிலையெதிர் மாறாக
- நேர்மாறாக.
Vice versa (Adverb)
- இதற்கு நேர்மாறாக நீங்கள் கூறியது உண்மை என்பதை குறிக்கிறது. நீங்கள் இந்த கூற்றை பயன்படுத்தும்பொழுது, நீங்கள் முன்பு பேசிய இரண்டு விஷயங்கள் வாக்கியத்தில் நிலைகளை மாற்றுவதைக் குறிக்கிறீர்கள்.
- பொதுவாக இந்த வாக்கியம், இருவரின் குணத்தை பற்றி அல்லது அவர்களின் விருப்பு வெறுப்புக்களை பற்றி கூறுவதற்கு அதிகமாக பயன்படும்.
- ஒரு செயலை செய்யும் பொழுது இப்படியும் செய்யலாம் அல்லது அப்படியும் செய்யலாம், என்பது போன்ற விலகங்களுக்கும் இந்த எதிரெதிர் மாறாக கூற்று பயன்படுகிறது.
- இதில் நீங்கள் இப்போது சொன்ன வாக்கியம் எதிர் மாறாக கூறும் பொழுதும் அதே கருத்தையே அறிவிக்கும். எனவே தான் இது எதிர்ரெதிர் மாறாக அல்லது நிலையெதிர் மாறாக கூறும் பொழுது எப்பொழுதும் ஒரே கருத்தை தெரிவிக்கிறது.
- பெரும்பாலும், சில வகையான சொற்றொடர்களை மாற்றுவதற்கு நேர்மாறான கூற்று மிகவும் சுருக்கமான வழியாக பார்க்கப்படுகிறது.
Examples of vice versa in Tamil: தமிழில், நேர்மாறான கூற்றின் எடுத்துக்காட்டுகள்:
1. English: He doesn’t like her, and vice versa.
Tamil: அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை, நேர்மாறாக அவளுக்கும் அவனைப் பிடிக்கவில்லை.
2. English: She refuses to believe anything they say and vice versa.
Tamil: அவர்கள் சொல்வதை அவள் நம்ப மறுக்கிறாள், நேர்மாறாக அவர்களும் அவளை நம்ப மறுக்கிறார்கள்.
Explanation: இந்த வாக்கியங்களில் நேர்மறையான கூற்று, ஒருவரின் விருப்பு வெறுப்பு மற்றும் அவரின் குணத்தை பற்றி கூற உபயோகப்படுத்தப்படுகிறது.
3. English: The saplings were sown from right to left and vice versa.
Tamil: மரக்கன்றுகள் வலமிருந்து இடமாகவும், நேர்மாறாகவும் விதைக்கப்பட்டன.
4. English: You can fly from India to Sri Lanka on this type of visa, and vice versa.
Tamil: இந்த வகையான விசாவில் நீங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பறக்கலாம், அதற்கு நேர்மாறாக இலங்கையிலுருந்து மீண்டும் இந்தியாவிற்கும் பறக்கலாம்.
Explanation: இந்த இரு வாக்கியங்களில், ஒரு செயலை செய்யும் பொழுது இப்படியும் செய்யலாம் அல்லது அப்படியும் செய்யலாம், என்பது போன்ற விலகங்களுக்கும் இந்த எதிரெதிர் மாறாக கூற்று பயன்படுகிறது.
5. English: Humans can perform some tasks better than computers can and vice versa
Tamil: கணினிகள் செய்வதை விட மனிதர்கள் சில பணிகளை சிறப்பாக செய்ய முடியும். இதற்க்கு நிலையெதிர் மாறாக, கணினிகள் மனிதர்களை விட மேலும் சிறப்பாக செயல்பட முடியும்.
Explanation: இந்த வாக்கியத்தில் நிலையெதிர் மாறாக கூற்றை விளக்குகிறார்கள்.
6. English: There are times when I’m happy even when the situation isn’t going well and vice versa.
Tamil: நிலைமை சரியாக இல்லாதபோதும் நான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களும் உள்ளன. அதற்கு நேர்மாறாக நிலைமை நன்றாக இருக்கும்போது கூட நான் சோகமாக இருக்கும் தருணங்களும் உண்டு.
Or you can explain like this in shortform இதனை சுருக்கமாக கூறுவதற்கு –
நிலைமை சரியாக இல்லாதபோதும் நான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களும் உள்ளன, சரியான பொழுது அதற்கு நேர்மாறாகவும் நடக்கும்.
Explanation: இதில் சில வகையான சொற்றொடர்களை மாற்றுவதற்கு நேர்மாறான கூற்று மிகவும் சுருக்கமான வழியாக பார்க்கப்படுகிறது.
‘Vice versa’ Synonyms-antonyms
‘Vice versa’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு.
- Conversely
- Inversely
- The other way around
- Contrariwise
- In reverse
‘Vice versa’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு.
- Alike
- Ditto
- Also
- Likewise
- Similarly
- As well
- Identically
- So equally.