fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள் மொழி

தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம் – வேதாந்தம் பற்றிய சில உண்மைகள்.

வேதங்கள்

செய்தி சுருக்கம்:

பல்வேறு புரியாத ஆன்மிக கருத்துகளுக்கு எல்லோராலும் பதிலாக எளிதில் சொல்லப்படுவது “வேதாந்தி மாதிரி பேசிக்கொண்டு திரியாதே” என்பதாகும். எளிதாக புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் எல்லாம் வேதாந்தம் என்று பொதுப்படையாக கூறினாலும், அறிவியலிலும் இதன் பங்கு உண்டு. ” அறிதொரும் வெளிப்படும் அறியாமை போல்” என்ற வள்ளுவரின் வாக்கினை போல தினந்தோறும் புதிய புதிய பிரபஞ்ச ரகசியங்கள் அறிவியல் மூலமாக புலனாகிறது. இதுவரை புரியாமலிருந்த அல்லது வெளிப்படாமல் இருந்த உண்மைகள் தேடுவதன் மூலம் தெரிய வரும். விண்கலம் ஏறி சென்று ஆராயும் விஞ்ஞானத்திலும் அதுதான் வழி, உள்மனம் புகுந்து சென்று தன்னையுணர தலைப்படும் மெஞ்ஞானத்திலும் அதுவேதான் அடிப்படை வழி. இதுவரை உணராத, தெரிந்து கொள்ளாத, புரியாத ஒன்றை விளங்கிக்கொள்ளும் தருணங்களில் வேதாந்தம் உணரப்படுகிறது. இங்கு வேதம் என்பது நேர்மைக்கும், உண்மைக்கும், அன்புக்கும், கருனைக்கும் கட்டவிழ்ந்து தன்னை உணர்ந்து கொள்ள வழிவகுக்கிறது.

வேதாந்தத்தை பற்றிய நம் முன்னோர்களின், கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் கருத்துகளை மட்டும் அல்லாது அறிவியல் ரீதியான அலசல்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு வேதாந்தம் என்பதை பற்றி சில புரிதல்களை பெற்று உன்னதமடைவோம். அவற்றின் சாரம்சங்களில் சிலவற்றையாவது அறிந்து தெளிவோம்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ஒரு தனி மனிதன் தன்னை பற்றியும் இந்த பிரபஞ்சத்தை பற்றியும் அறிந்துகொள்ள தத்துவ விசாரணையில் இறங்கும் போது அவனுக்கு வேதாந்தங்கள் துணை புரிகின்றன. ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களின் இறுதியிலும் வேதாந்தம் பற்றிய உபநிஷத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு வேதத்தின் அந்தமாக இருப்பது வேதாந்தம் எனப்படுகிறது. நான்கு வேதங்களிலும் மொத்தமுள்ள 108 உபநிஷத்துக்களில் 14 உபநிஷத்துக்கள் மனிதனின் ஆன்ம மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு மிக இன்றியமையாத காரணிகளாக அமைந்துள்ளன.

ரிக் வேதமானது ஐதரேயா மற்றும் கௌசீதகி என்ற வேத அந்தங்களை கொண்டுள்ளது, இதே போன்று ஏனைய வேதங்களும் அதன் சிறப்பம்சங்களான வேதாந்த உபநிஷத்துகளை இறுதியாக கொண்டுள்ளன. இந்த வேதாந்த சாரம்சங்கள் ரகசியங்களாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக தெளிவான சிந்தனையை அடைய முடியும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாக உள்ளது.

உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்ற அடிப்படை ஆதாரங்களை தாண்டி நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சம் மற்றும் உயிரின் சூட்சும உண்மைகளை உணர்வதற்கு தத்துவங்களாக இருந்து துணை புரிபவை உபநிஷத்துக்கள் ஆகும். படைப்புகளின் மூலம், சிருஷ்டிகர்த்தா மற்றும் மனிதனின் ஆன்மா போன்ற அறிவியலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களை அலசுவதாலும் உலக நடைமுறைக்கு ஒவ்வாத சிந்தனைகள் மற்றும் தேடல்களை கொண்டிருப்பதாலும் வேதாந்தம் ஒரு புரியாத புதிராகவே பலருக்கும் உள்ளது. இவற்றின் சாரம்சங்களை எளிதில் ஒருவரால் புரிந்துகொள்ள முடியாத வகையில் மிக ஆழமான கருத்துகளை கொண்டதாக இருக்கிறது. தினசரி நடைமுறை வாழ்வில் சிக்குண்டு, தேவைகளுக்காக சம்பாதித்து வாழ்கையை முடித்து கொள்ளும் பலரும் இதன் அருகிலேயே வருவதில்லை. யாரேனும் ஆன்மிக விஷயங்களை ஒருவருக்கும் புரியாத வகையில் தெளிவு படுத்த முயன்றால் அவரை வேதாந்தி எனவும் கூறுவதுண்டு.

வாழ்க்கையில் ஆன்ம தேடல் உள்ள ஒரு நபரால் தான் வேதாந்த தத்துவங்களையும் அதன் ரகசியங்களையும் உணர்ந்து கொள்ள முடியும். மேலோட்டமாக பார்க்கும் போது இவையனைத்தும் எதோ தெய்வங்களை போற்றும் பாசுரங்களை போலவே கையாளப்படுகிறது. எனினும் அதைத்தாண்டிய அனுபவ உண்மைகளை தன்னகத்தே கொண்டிருப்பவை இந்த வேதாந்த உபநிஷத்துக்கள் ஆகும். இந்த வாழ்வின் நிலையாமையை பற்றியும், பரமாத்மாவின் நிலைத்தன்மை பற்றியும், மேலும் எல்லா உயிர்களும் ஓரிடத்திலேயே ஜனித்து ஓரிடத்திலேயே சென்று சேர்கிறது என்ற உண்மையையும் கூறுபவை வேதாந்தங்கள் எனப்படும்.

மேலும், வேதங்களை புரிந்து கொள்வது என்பது அவரவரின் ஆன்மிக பக்குவ நிலையை பொறுத்ததாகும். ஏனெனில் இந்த வேதாந்தங்கள் பெரும்பாலும் மறைபொருள் கொண்ட பாடல் வடிவிலோ அல்லது உரையாடல் வடிவிலோ உள்ளன. இவற்றை பற்றி விளக்கம் அளிக்கும் போது பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆயினும் எவர் ஒருவர் தன் தினசரி வாழ்வியலை தாண்டிய பிரபஞ்ச ரகசியங்களை உணர முற்படுகிறாரோ அவருக்கு இந்த வேதாந்தங்கள் சில விஷயங்களை தெளிவாக விளங்கிக்கொள்ள துணை புரியும்.

ஆன்மா வேறு கடவுள் வேறு என்பது சித்தாந்தத்தின் அடிப்படை, ஆனால் “அஹம் பிரம்மாஸ்மி” என்று சொல்வதன் மூலம் இரண்டும் ஒன்றே என்ற கொள்கையை உடையது வேதாந்தம் ஆகிறது. சுவாமி விவேகானந்தர் அவருடைய போதனைகள் பலவற்றில் வேதாந்தத்தை குறிப்பிடுகிறார். வேதாந்தத்தின் உண்மையும் ஆதிக்கமும் என்று அவர் சொற்பொழிவுகள் கூட ஆற்றியுள்ளார். தனி மனிதனையோ, கடவுளையோ சார்ந்து இருக்காமல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்றாக வேதாந்தங்கள் பார்க்கப்படுகின்றன.

 

பின்னணி:

மனித அறிவின் இறுதி நிலை என்பது வேதாந்தங்களின் சாரம்சங்களுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. “யாவரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று எவ்வுயிர்க்கும் இன்னல்களை விளைவிக்காமல் எந்த தீங்கும் செய்யாமல் வாழ்பவர்கள் வேதங்களை ஓதியுணர்ந்து மனம் சம நிலைப்பட்டவர்கள் ஆவார்கள். இந்த அவசர உலகத்தில் தினசரி கடமைகளை நிறைவேற்ற ஓடி கொண்டிருக்கும் சாதாரண மனிதனின் மனதில் வேதங்களை பற்றிய எந்தவொரு சிந்தனையும் ஏற்பட வாய்ப்பில்லை. சினிமா, திரை பாடல்கள் போன்ற சிற்றின்பங்களில் மூழ்கி சண்டை, சச்சரவு போன்ற பிரச்சினைகளை தன் சொந்த உறவினர்களிடமே காட்டக்கூடிய வெகு அற்பமான மனிதர்களால் இவற்றின் விளக்கங்களை புரிந்து கொள்ள இயலாது, இவற்றின் இருப்பையே அவர்கள் உணர மாட்டார்கள், வாழ்ந்து தீர்ந்து போகும் விட்டில் பூச்சி வாழ்க்கை அவர்களுடையது.

மாறாக கருணையும், அன்பும் பொங்கி வழியும் மனிதர்களை தேடி இந்த வேதாந்த உண்மைகள் தானாகவே வந்து சேரும், அவர்களும் பிரபஞ்ச ரகசியம் முதல் ஆன்ம ரகசியங்கள் வரை அனைத்தையும் தெளிவுபட உணர்ந்துகொள்ள முடியும். இப்படிப்பட்ட பேரதிசயங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் வேதாந்த உண்மைகள் முழுவதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் அது முதன்மையாக போதிக்கும் அன்பையும், கருணையையும் நாம் கடைபிடித்து வாழ்வது நம் வாழ்விற்கு நலம் தரும்.

 

தொடர்புடைய பதிவுகள் :

Fend Meaning in Tamil
Since Tamil Meaning
ஆளில்லா 'ட்ரோன்' விமானங்கள், அமெரிக்கா இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏன்?
 உடலில் மென்மையான தசைநார்களை பெருக்கிக் கொள்வது அல்சைமர் நோயிலிருந்து நம்மை காக்கும்!-  ஆய்வு முடிவு...
மூளை மையங்களைத் தூண்டுவதன் மூலம் நோயாளியை மருந்துகளின்றி மயக்கத்தில் ஆழ்த்த இயலும்! ஆய்வு சொல்லும் அ...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த பூகம்பம், கவுகாத்தியில் வீட்டைவிட்டு அலறியடித்து வெளியேறி...
Legend Meaning in Tamil
உடல்நலனை மட்டுமல்ல மனநலனையும் பாதிக்கும் ஜங்க் உணவுகள்! எதைத் தின்கிறோமோ.. அதுவாகிறோம்…!!
இந்தியாவின் பொருளாதாரக் கணிப்பு இங்க இருக்கு, எதிர்காலம் எப்படி இருக்கோ?
உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துங்கள் - அப்புறம் பாருங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை எப்படி மாறுகி...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *