fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள்

சிறுநீர்பாதைத் தொற்று பற்றி நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள்! தெரிவோம்… தெளிவோம்!!

 சிறுநீர்பாதையின் முக்கியத்துவத்தையும் அதில் ஏற்படும் அசாதாரணமான தொற்றுகளையும் முழுமையாக தெரிந்துகொண்டால் அதை சிறுநீர் பாதையல்ல, பெருநீர் பாதை என்று பெயர்சூட்ட விழைவீர்கள்!  உடலின் கழிவுகளை வெளியேற்றுவதோடு உடலின் வெப்பநிலை சமன்பாட்டிற்கு முக்கியமான ஒரு பாகமாக உடலில் திகழ்வது இந்த சிறுநீர் பாதையாகும். 

இத்தகைய சிறுநீர் பாதைத் தொற்று என்பது இன்றைய காலகட்டங்களில் மிகவும் சாதாரணமாக நம்மிடையே காணப்படுகிறது. சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் என்ற சாதாரணமான அறிகுறியில் தொடங்கை சிறுநீர் பாதையில் வீக்கம் – ரத்தம் வருதல் என்ற விபரீதமான அறிகுறி வரையில் இதன் பாதிப்புகள் இருக்கும். 

அமெரிக்காவில் வாழும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் சிறுநீர் தொற்றிற்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் சாதாரணமான நோயாக இது இருந்தாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அசாதாரணமாக உணர்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சிறுநீர் பாதைத் தொற்றுக்கான காரணங்கள்

சிறுநீர் பாதைத் தொற்று பொதுவாக பாக்டீரியல் சிஸ்டிடிஸ் என அழைக்கப்படுகின்றது. இது ஒவ்வொரு தனி நபரின் தனிப்பட்ட சுகாதார நடத்தையுடன் தொடர்புடையது. அதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் சிறுநீர் தொற்றிற்கு ஆளாவதற்கு காரணம் பெண்களின் சிறுநீர் பாதை ஆண்களைக்காட்டிலும் நீளம் குறைவாக இருப்பதே ஆகும். 

சிறுநீர் பாதை தொற்று ஏற்பட  ஈ.கோலி என்ற பாக்டீரியாதான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். இது மனிதர்களின் குடலில் வாழ்கிறது. இது எந்தமாதிரியான சூழ்நிலையில் சிறுநீர் குழாய்க்கு இடம்பெயர்ந்து சிறுநீர் பாதையை பாதிக்கிறது என்பது குறித்து கண்டறிய இயலவில்லையாம். 

இத்தகைய சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதிலும், அதன் அறிகுறிகளிலும் நம்மவர்கள் பலவிதமான மூட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். அதில் நான்கு அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கைகளை பற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நம்பிக்கை 1 : எரிச்சல் இல்லாவிட்டாலும் அது சிறுநீர் தொற்று பாதிப்பா? 

சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் இல்லாவிட்டாலும் சிறுநீர் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் ஆண்களில் புரோஸ்டேட் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறுநீர் பாதையில் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் தொற்று ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிறுநீர் தொடர்பான ஒரு சிக்கலை சிறுநீர் பாதை தொற்றாகக் கருதுவதற்கு, நோயாளி சில அறிகுறிகளைக் காட்ட வேண்டும் மற்றும் அவர்களின் சிறுநீரில் பாக்டீரியாவை உறுதிப்படுத்த வேண்டும்.

எரிச்சல் உணர்வு மற்றும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஆகியவை பொதுவான சிறுநீர் தொற்று அறிகுறிகள் ஆகும். இளம் கல்லூரி மாணவிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவருகிறது. 

வயதானவர்களில் சிறுநீர் தொற்று காய்ச்சலாகவோ அல்லது லேசான முதுகுவலியாகவோ காணப்படுகிறது. இது செப்சிஸ் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும் அறிகுறிகளாகும். ஆனால் இத்தகைய அறிகுறிகள் மிகவும் அரிதானவைதான். 

நம்பிக்கை 2: உடலுறவு கொண்டால் சிறுநீர் தொற்று  ஏற்படுமா?

ஏற்படாது. உடலுறவினால் ஏற்படும் எத்தகைய பாக்டீரியா பாதிப்பையும் இல்லாமலாக்க உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க பெண்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

ஆனால், இந்த அறிவுறை எத்தகைய அறிவியல் ஆதாரமும் அற்றது. NYU லாங்கோனில் உள்ள சிறுநீரகவியல் இயக்குனர் டாக்டர் பெஞ்சமின் ப்ரூக்கர் கூறுகையில், “உடலுறவுக்குப் பிறகு அல்லது உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிப்பது நோய்த்தொற்றுகளைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்கிறார். 

இருப்பினும், இந்த செயல்பாடு சில பெண்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படாமல் செய்யக்கூடும் என்று அவர் கூறினார்.

செக்ஸ் மற்றும் சிறுநீர் தொற்றுக்கு இடையே உள்ள தொடர்பைப் பற்றிய பொதுவான கருதுகோள் என்னவென்றால், பெரினியத்தின் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உடலுறவின் போது சிறுநீர்க்குழாய்க்குள் தள்ளப்படுகிறது, இது சிறுநீர் தொற்றாக உருவாகலாம் என்று நம்பப்படுகிறது. 

ஆனால் சில பெண்கள் உடலுறவுக்கு முன் அல்லது பின் சிறுநீர் கழிக்காவிட்டாலும் கூட, சிறுநீர் தொற்றை உருவாக்க மாட்டார்கள்.

நம்பிக்கை 3: சுத்தம் சம்பந்தமான பிரச்சனையா இந்த சிறுநீர் தொற்று ?

நமது டாக்டர்கள் பெண்களிடம் எப்போதும் கூறும் அறிவுரைகளான, முன்பக்கமாகவே துடையுங்கள் மற்றும் இறுக்கமாக உடை அணியாதிருங்கள்  போன்றவை உண்மையில் சிறுநீர் தொற்றை தடுக்கின்றனவா? 

முன்பக்கமாகவே துடைப்பது மற்றும் இறுக்கமான உடைகளைத் தவிர்ப்பது யோனி பகுதியில் எரிச்சல் மற்றும் புண்கள் ஏற்படாமல் தடுக்கக் கூடும். ஆனால் அத்தகைய செயல்பாடுகள் சிறுநீர் தொற்றை தடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

சிறுநீர் தொற்று என்பது நாம் எவ்வளவு சுத்தமாக குளிக்கிறோம் என்பதையும், நாம் அணியும் உடைகளையும் சார்ந்ததல்ல. 

நம்பிக்கை 4: ஆண்டிபயாட்டிக்குகள் சிறுநீர் தொற்றை தடுக்குமா? 

நிச்சயமாக இல்லை. உடல் இயல்பாகவே பாக்டீரியா தாக்குதல்களை எதிர்த்து போராட வல்லது. ஆண்டிபயாட்டிக்குகள் தேவைப்படும் ஒரு காயத்தை அல்லது பாக்டீரியா பாதிப்பை தடுக்கக் கூடியவைதான். ஆனால் ஆண்டிபயாட்டிக்குகளை மட்டுமே சிறுநீர் தொற்றைத் தடுக்கும் காரணியாக எண்ணுவது தவறான ஒன்று. 

சிறுநீர் தொற்றிலிருந்து குணமடைவதற்கான வழிதான் என்ன? 

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, ஹார்மோன்களின் அளவு குறைவது யோனி பகுதிகள் மற்றும் சிறுநீர் பகுதிகளில் தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். 

சரியான அளவில் நீர் அருந்துவதன் மூலம் உடலை நீர்ச்சமநிலையில் வைத்திருப்பது சிறுநீர் தொற்றிலிருந்து குணப்படுத்தும். நெல்லி சாறு பயன்படுத்துவது பழமையான ஒரு பழக்கமாக இருந்தபோதும் அது இப்போதும் நமக்கு நல்ல பலனைக் கொடுக்கிறது. 

உடலுக்குத் தேவையான அளவிற்கு நீர் அருந்துதல், நீர் சத்து மிக்க பழங்கள் மற்றும்  காய்கறிகளை உண்ணுதல் போன்றவை சிறுநீர் தொற்றை குணமாக்க உதவுவன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதைத்தானே நாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்தோம்!

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *