fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Unique in Tamil

பொருள்:

தனித்த, தனித்தன்மை உடைய, ஒரே ஒரு, தனித்தன்மை வாய்ந்த, தனித்துவம், அருந்தனிப்பண்பு, தனித்தன்மை வாய்ந்தது, மிகவும் அரிதான, விசித்திர, தனிப்பட்ட, சிறப்பு, தனிமைப்படுத்தப்பட்ட, ஈடு இணையற்ற, தன்னிகரில்லாத, தனி ஒன்று, ஒப்பிடமுடியாதது, அருமை, அசாதாரணமானது. 

விளக்கம்:

ஒரு பொருளோ, ஒருவரின் குணாதிசயம், அல்லது ஒருவரின் திறமையோ எது ஒன்று எல்லாவற்றிலும் இருந்து தனித்து தெரிகிறதோ, அதுவே தனித்தன்மை, தனித்துவம் (unique) என்பதாகும்.

வேறு எதையும் போல் அல்லாமல் 

ஒரு நபர், குழு, இடம், பொருள், குணம், விஷயம் ஆகியவை ஏதோ ஒரு வகையில் தனித்திருப்பது

ஒருவகை நிபந்தனை, ஒப்பந்தம் பிரத்யேகமாக இருப்பது

உதாரணம்:

  • Indian palaces and temples have unique features

        இந்திய அரண்மனைகள் மற்றும் கோவில்கள் தனித்தன்மை வாய்ந்தது 

  • In Indian history we have lot of uniqueness 

  இந்திய வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்த நிறைய விஷயங்களை காணலாம்

  • Tamil language has been considered as a unique language by everyone

       தமிழ் மொழி தனித்தன்மை வாய்ந்ததாக எல்லோராலும் கருதப்படுகிறது

  • In museum, we have lot of unique things

      அருங்காட்சியகத்தில் தனித்தன்மை வாய்ந்த நிறைய பொருட்களை காணலாம்

  • In the computer world, Bill Gates has been considered as an unique person

      பில்கேட்ஸ் கணினி உலகில் தனித்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார்

  • Words, action and thoughts show him as a unique person

      ஒருவருடைய சொல் செயல் எண்ணம் அவரை தனித்து காட்டுகிறது

  • In the competitive world, we can find patience as a unique quality of a person

      போட்டி நிறைந்த உலகில் நிதானம் பொறுமை போன்ற குணங்களை கொண்டவர் தனித்து தெரிவார்

  • Because of his talent in chess, kukesh is considered unique

       சதுரங்க விளையாட்டில் தன் திறமையால் தனித்து காணப்பட்டார் குகேஷ்

இவ்வாறு எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் தனித்துவம் என்பது உண்டு. குழந்தை முதல் பெரியவர் வரை, பொருட்கள், திறமை, குணம், வரலாறு, மொழி, கலை என எல்லா விஷயங்களிலும் தனித்துவம் உண்டு

ஒத்தசொற்கள் (Synonyms)

Distinctive, individual, special, isolated, peculiar (தனிப்பட்ட சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட வேறுபட்ட விசித்திரமான)

எதிர்ச்சொற்கள் ( Antonyms)

Common, usual, ordinary, normal (சாதாரண வழக்கமான பொதுவான)

 தனித்துவம் என்பது இவ்வாறும் வரும்:

1. Unique feature –  தனிப்பட்ட அம்சம் 

கணினியில் நிறைய மொழிகள் தெரிந்து வைத்திருப்பது அவரது தனிப்பட்ட அம்சமாகும்

2. Unique skill –  தனிப்பட்ட திறமை 

இடது கை மற்றும் வலது கை இரண்டிலும் எழுதுவது மற்றும் வரைவது அவரின் தனித்திறமை

3. Unique opportunity –  தனிப்பட்ட வாய்ப்பு 

அவருக்கு வரலாற்று திரைப்படத்தில் தனிப்பட்ட வாய்ப்பு கிடைத்தது

4. Unique identification –  தனித்துவமிக்க அடையாளம்

 கைகளில் ஆறு விரல்கள் இருப்பது தனித்துவமிக்க அடையாளம் ஆகும்

இவ்வாறு எல்லாம் யூநீக் (unique) எனும் வார்த்தையை உபயோகப்படுத்த முடியும்.

தொடர்புடைய பதிவுகள் :

நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
திருமணப்பொருத்தம்பார்ப்பதுஎப்படி?
பங்குச்சந்தைமுதலீட்டின்வெற்றிஇரகசியம்என்ன..?
இந்தியாவின் உள்நாட்டில் தயாராகும் நீண்டதூர நிலப்பரப்பு ஏவுகணை! 400 கி.மீ தூரத்தில் விமானங்கள் மற்றும...
ஓரல் செக்ஸ் (வாய்வழிப் புணர்ச்சி) கேன்சருக்கு வழிவகுக்கிறதா? உலகம் முழுவது இப்படி வாயால் கெட்டவர்கள்...
மனித உடலில் மெல்லக் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உங்கள் மூளைக்குள்ளும் செல்லும் பிளாஸ்டிக் க...
பச்சை நிறமாக மாறிவரும் பெருங்கடல்கள்! நிலமல்லவா பசுமையாக இருக்க வேண்டும்…!! என்ன நடக்கிறது?
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up