Ugly Tamil Meaning

இக்கட்டுரையில் ‘Ugly’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் எளிதான எடுத்துக்காட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
‘Ugly’ உச்சரிப்பு= அக்லி
Ugly meaning in Tamil
‘Ugly’ என்பதன் அர்த்தம், விரும்பத்தகாதது, அழகற்றது, ஈர்ப்புத்தன்மை இல்லாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது, அருவருப்பான தன்மை உடையது அல்லது பாராட்ட முடியாதது முதலியன.
‘Ugly” என்ற சொல் ‘adjective’ (பெயரடைச் சொல்) ஆக செயல்படுகிறது.
- ‘Ugly’ என்ற பெயரடைச் சொல் தனித்தோ அல்லது ஒரு பெயர் சொல்லுக்கு முன்போ இடம் பெரும்.
- இந்த சொல் பெரும்பாலும் பார்வை அல்லது தோற்றம் தொடர்புடையதாக தோன்றினாலும், இது பல இடங்களில் வெவேறு அர்த்தங்களைக் கொண்டு தோன்றும்.
- இது ஒரு நபரின் தன்மை மற்றும் பண்பையும் விளக்க உதவும். (உ.தா.) – ‘ugly’, ‘ugly behavior’, ‘ugly attitude’ முதலியன.
- ‘Ugly’ என்ற சொல் ஒரு பொருளுக்கு முன்னால் இடம் பெற்றால், அந்த பொருளின் தரம் மற்றும் அப்பொருள் காண அல்லது உபயோகிக்க எவ்வாறு இருக்கும் என்ற தன்மையை விளக்கும். (உ.தா.) – ‘ugly mop’, ugly car’ முதலியன.
- இது சில சமயங்களில் ஒரு சம்பவம் அல்லது அனுபவத்தை குறிக்கவும் உபயோகப்படும். (உ.தா.) – ‘ugly experience’, ‘ugly incident’ முதலியன.
- பேச்சுவாக்கில் ‘அசிங்கம்’ என்றும் கூறப்படும்.
‘Ugly’ என்ற வார்த்தையின் எடுத்துக்காட்டுகள் (Examples) கீழே உள்ளன.
- English: That dress looks so ugly.
Tamil: அந்த உடை மிகவும் கவர்ச்சி அற்றதாக தோற்றமளிக்கிறது.
- English: The weather today is ugly.
Tamil: இன்றைய வானிலை மோசமாக உள்ளது.
- English: I got caught in an ugly traffic jam.
- Tamil: நான் ஒரு கடினமான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டேன். English: By the end of the day, we had to face the ugly truth of an empty fuel tank.
Tamil: நாள் முடிகையில், தீர்ந்த எரிபொருள் தொட்டியின் கசப்பான உண்மையை நாங்கள் எதிர்கொள்ள நேரிட்டது.
- English: The spilled water made the painting ugly.
Tamil: சிந்திய நீர் ஓவியத்தை அலங்கோலம் ஆக்கியது.
- English: The betrayal by my friend was a very ugly experience.
Tamil: என் நண்பனின் துரோகம் மிகவும் துரதிருஷ்டமான அனுபவமாக இருந்தது.
- English: The animal was drenched in mud and looked very ugly.
Tamil: சேற்றில் முழுகி வெளி வந்த மிருகம் மிக அருவருப்பாக இருந்தது.
- English: The race car’s exterior became ugly.
Tamil: போட்டியில் பங்கேற்ற காரின் வெளிப்புறம் அழுக்கானது.
‘Ugly’ Synonyms-Antonyms
‘Ugly’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு.
Unattractive
Unpleasant
Offensive
Provocative
Un-favoring
Bitter
Unfortunate
‘Ugly’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு.
Beautiful
Pleasant
Favoring