fbpx
LOADING

Type to search

தொழில்நுட்பம்

டிவிட்டர் வீடியோவை நோக்கி: எலான் மஸ்க்

Twitter

செய்தி சுருக்கம்:

மைக்ரோ பிளாகிங் தளமாக இருக்கும் டிவிட்டர் இனி குறு வீடியோக்களையும் பார்வையிடலாம் என அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

சில வருடங்களாக, சமூக ஊடங்கங்களில் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஓடும் காணொளிகள் மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. இணையப் புரட்சியில் இது ஒரு மைல்கள் ஆகும். ஆம், ஒரு விரிவான கட்டுரையை படித்து அதை செயல்படுதுவதை விட ஒரு சில நிமிடங்கள் ஓடும் காணொளியைப் பார்த்து கற்றுக்கொள்வது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது. அதனாலே பல சோசியல் மீடியா ஆப்ஸ்களும் பயனாளர்களை தக்கவைக்க சொந்தமாக வீடியோ தளத்தை உருவாக்கி வருகிறார்கள்.  அந்தக் கட்டாயத்தில் டிவிட்டர் நிறுவனமும் இருப்பது மஸ்கின் ட்வீட் மூலம் தெரியவருகிறது.

பின்னணி:

ஒரு அடர்ந்த காட்டில் ஒருவர் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார், அந்த இடத்தில் அவருக்கு உதவி செய்ய கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. செல்போன் அழைப்புகளும் வேலை செய்யவில்லை. ஒரு நாள் முழுவதும் அந்த காட்டில் வலியுடன் துடிக்கிறார், பின்னர் ஒரு யோசனை வருகிறது. அப்போது புதிதாக அறிமுகமான டிவிட்டர் என்னும் செயலியில் பல ஃபாலோயர்களை அவர் கொண்டிருந்தார். அவர்களை உதவிக்கு அழைத்து ஒரு ட்வீட் போடுகிறார். சில மணிநேரங்களில் பல பேர் அவரை தேடி அந்த இடத்திற்கு வந்து குவிகின்றனர். இதுதான் டிவிட்டரின் உன்னதம், சமூக ஊடகமென்னும் ஆச்சரியம், அதிசயம்.

டிவிட்டர் நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு சிறு குழுவிற்குள் உரையாற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையே டிவிட்டரின் உருவாக்கதிற்கு காரணமாக அமைந்தது. ஜாக் டார்சே, நோஹ் கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் எவான் வில்லியம்ஸ் என்னும் நால்வர் கூட்டணி தான் டிவிட்டரை வெற்றிகரமாக நடைமுறைபடுத்திக்காட்டியது.   அந்த காலகட்டங்களிளே பிளாக் எனப்படும் வலைபதிவுகள் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. இணையத்ததை பயன்படுதுபவர்கள் ஒரு தனிப்பட்ட டைரியை போல பிளாகில் அன்றாட விஷயங்களை எழுதி வந்தார்கள். ஆனால் டிவிட்டர் இந்த ஒரு விஷயதில் மாற்று கருத்தை கொண்டிருந்தது. அதாவது எவ்வளவு முக்கியமான அல்லது விரிவான செய்தியாக இருந்தாலும் சரி அதை 140  வார்த்தைக்குள் எழுதி முடிக்க வேண்டும் என்பதே அது!

இணையப் பயன்பாட்டாளர்களின் பெருக்கத்தால் அடுத்த பதினைந்து வருடங்களில் டிவிட்டர் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த சமூக ஊடகமாக உருவெடுத்தது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனாளர்களை தன் வசம் ஈர்த்தது. அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் செய்தியாளர்களும், இன்ஃப்ளூயன்ஸர்களும் நிமிடதிற்கு நிமிடம் ட்வீட் செய்து தங்கள் கருத்தை வெளியிட்டனர்.  இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு தேசத்தின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் அளவிற்கு இதன் வளர்ச்சி பிரமமிப்படைய வைத்தது.

டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்கின் தலையீடு

அதே நேரம் பல அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேல் ஆர்வம் செலுத்தி வந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், டிவிட்டரின் இந்த ஆற்றலைக் கண்டு வியந்தார். சென்ற வருடம் அக்டோபரில் “பறவை சுதந்திரப்படுத்தப்பட்டது” என மஸ்க் போட்ட ட்வீட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, சுமார் நாற்பத்தி மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளேன் என்பதன் அறிவிப்பு தான் அது. இந்த செய்தி  மிகவும் பரபரபாக பேசப்பட்டதற்கு மற்றொரு காரணம், அன்றைய டிவிட்டரின் மதிப்பு வெறும் இருபது பில்லியன் அமெரிக்க டாலர் தான்! டிவிட்டரை வாங்கிய வேகத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்தார். உயரதிகாரத்தில் இருந்த பலரை மாற்றினார். பின்னர் தினம் தினம் டிவிட்டர் பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லாமல்போனது.

Twitter

பதவியேற்ற நாளிலிருந்து டிவிட்டரை வைத்து எவ்வாறெல்லாம் வருமானம் ஈட்ட முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டர் பயனாளர்களின் “புளூ டிக்” எனப்படும் ஸ்பெஷல் குறியீட்டை ரத்து செய்தார். புளூ டிக் வேண்டும் என்றால் மாத சந்தா கட்டி பெற வேண்டும் என்ற அவரது ட்வீட் உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த முடிவு எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் ஈட்டவில்லை, வெறும் 11 மில்லியன் அமெரிக்க டாலரகள் தான் வருமானம், என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவின் ஸ்டார்ட் அப் செயலியான டிக் டாக் முதல்முறையாக பத்து முதல் இருபது செகண்ட் வீடியோகக்களை பதிவேற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. குறுகிய காலத்தில், பல நாடுகளில், இது மிகப்பெரும் வெற்றியடைய, இதனைத் தொடர்ந்து மற்ற சோசியல் மீடியா நிறுவனங்களும் தங்களுக்கென வீடியோ தளத்தை உருவாக்குகின்றன. இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஸ்னாப் சேட் போன்ற குறு வீடியோ தளங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதால் அதனை டிவிட்டர் செயலியிலும் கொண்டு வர முடிவு செய்துள்ளார் மஸ்க்.

டிவிட்டரில் பயனாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஸ்மார்ட் டிவி டிவிட்டர் செயலியிலும் இந்த காணொளி வசதியை ஏற்படுத்தப் போவதாக மஸ்க் ட்வீட்டியுள்ளார். பிறகென்ன இனி டிவிட்டருக்குள்ளும் மூழ்கிடலாம் தானே!

தொடர்புடைய பதிவுகள் :

உங்கள் கீ பேட் சத்தத்தை வைத்தே உங்கள் பாஸ்வேர்டுகளைத் திருடும் AI தொழில்நுட்பம்! வலைதளவாசிகளே எச்சரி...
போலி செய்திகளும்; மனித நம்பிக்கையும்
இருபதாயிரம் ஆண்டுகள் பூமியில் உங்களால் உயிர் வாழ முடியுமா? ஆச்சரியமான ஆய்வு முடிவுகள்!
உலகில் முதன்முறையாகப் பெண்ணின் மூளைக்குள் மலைப்பாம்பின் ஒட்டுண்ணி உயிருடன் கண்டுபிடிப்பு
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
சோஷியல் மீடியா மயக்கத்தில் இந்தியா - முளைக்கும் திடீர் பிரபலங்கள்
படங்களின் மூலம் தரவுகளைத் திருடும் ஆபத்தான புதிய ஆண்ட்ராய்ட் மால்வேர்
இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவி...
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *