இலங்கையின் டி. ஆர். சி வரைவில் தமிழர்களின் கவலைகளுக்கு தீர்வு எதுவும் இல்லை – சுமந்திரன்

செய்தி சுருக்கம்:
சிறிலங்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய வரைவு , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தில் தமது அன்புக்குரியவர்களை போரின் இறுதிக் கட்டத்தில் இழந்த சிறுபான்மைத் தமிழர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை கூட நிறைவேற்றத் தவறிவிட்டது, என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற உள்னாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போனார்கள். அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க தமது உறவினர்கள் அரச இராணுவத்திடம் சரணடைந்தார்கள் என்று காரணம் காட்டி, தமிழர்கள் இதனை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
பின்னணி:
விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட யுத்தம் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மோதல்களின் ஆணிவேர்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் ஒப்பீட்ட்ளவில் அபிவிருத்தி அடைந்த தென்னிலங்கையிலும் , தமிழர்கள் குறைந்தளவு அபிவிருத்தியடைந்து இராணுவமயப்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கிலும் வாழ்கிறார்கள். நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு பிரிக்கப்பட்டுள்ளது.