fbpx
LOADING

Type to search

உடல் நலம்

வெயிட் லாஸ்’க்கு இப்படி சாப்பிடுங்கள். எளிமையாக கொழுப்பை கரைக்க எளிமையான மூன்று டிப்ஸ்.

செய்தி சுருக்கம்:

இரு வெவ்வேறு உணவுகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது அதனை செரிக்க அதிக கலோரிகள் தேவைப்படுகிறது. இதனால் உடல் கொழுப்புகள் கணிசமாக குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க ஒரே வழி தான் உள்ளது. அது கலோரியை எரிப்பதன் மூலமாகவே நிகழ்கிறது. கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. அதுமட்டும் இல்லாமல் நாம் உண்ணும் உணவை செரிக்கவும் கலோரிகள் செலவிடப்படுகிறது. ஒரு உணவானது மற்றொரு உணவுடன் இணக்கமாக செயல் புரியவேண்டும். அவ்வாறு செயல்படும் போது நம் உடலுக்கு இன்றியமையாத ஆற்றலை அது கொடுக்கும். அதை தினம்தோறும் கடைபிடித்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைப்  பெற முடியும்

ஓட்ஸ் மற்றும் நட்ஸ்

உங்களது நாளை நீங்கள் ஓட்ஸ் மற்றும் நட்ஸ் உடன் துவங்கினால் உங்களது உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். ஓட்ஸ் என்பது ஒரு வகையான முழு தானியமாகும். அதனை உணவில் சேர்க்கும்போது பல தரப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. முக்கியமாக ஓட்ஸில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுவதால் இதனைக் காலை உணவாக எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் உற்பத்தியாகும் ‘கெர்லின்’ என்னும் ஹார்மோனைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த ஹார்மோன் தான் ஒருவருக்கு அளப்பரிய பசியைத் தூண்டுகிறது. ஓட்ஸ் தானியம் இதனைக் குறைப்பதல் அடிக்கடி பசிக்கும் உணர்வு கட்டுக்குள் வருகிறது. நட்ஸ் களில் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக இருப்பது வால்நட். இது பார்க்க மூளையின் சிறிய வடிவ மாதிரியைப் போல இருக்கும். நிறைய நல்ல கொழுப்பைக் கொண்ட ஒரு கொட்டையாகும். வால்நட்டை ஓட்ஸ் உடன் சேர்த்து உண்ணும்போது உங்களை பசி இல்லாமல் முழுமையாக வைத்திருக்கும். இப்படி செய்வதால் உங்கள் பசி கட்டுப்பட்டு ஏற்கனவே சேமித்துவைத்திருக்கும் கொழுப்புகள் உடலுக்கு ஆற்றலாக மாறிக்கொள்ளும். இதனால் உடல் எடையும் குறையும்.

பீநட் பட்டர் மற்றும் ஆப்பிள்

பீநட் பட்டர் வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நல்ல கொழுப்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உடலில் நல்ல கொழுப்புகள் அதிகமாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவை தான் கெட்டக்கொழுப்புகளை நீக்கும். அதனால் இந்த பீநட் பட்டரை உணவில் சேர்ப்பது மிகவும் நல்ல உணவுத் தேர்வாக இருக்கும். பீநட் பட்டரில் ‘கின்ஸ்டீன்’ மற்றும் ‘ரெசேர்வேட்ரால்’ என்னும் இரண்டு முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ராடிகல்களை குறைக்கும். இதனால் பல நீண்டகால  நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆப்பிள், இதைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தினம் ஒரு ஆப்பிள் தின்றால் போதும் மருத்துவமனை பக்கமே செல்ல வேண்டாம் என ஒரு பிரபலமான பழமொழி இருக்கிறது. ஆம் ஆப்பிளில் அத்தனை வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. கலோரி குறைவாக இருப்பதாலும், லோ க்ளைசீமிக் இன்டெக்ஸ் ஆக இருப்பதனாலும் இதனை நீரிழிவு குறைபாடுடையவர்களும் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆப்பிளை பீநட் பட்டருடன் எடுக்கும்போது உடலில் வெப்பம் அதிகமாகிறது. ஏனென்றால் புரத்ததை எரிக்க அதிக கலோரிகள் தேவைப்படும் இதனால் கொழுப்புகள் எளிதாக கரையும். இதனால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டை மற்றும் கேப்சிக்கம்

மனித உடலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. தினம் உண்ணும் பருப்பில் நிறைவான புரத்தச்சத்து இருப்பினும், கோழி முட்டையில் அதிகளவு புரதம் உள்ளது. இதனால் தான் அரசுப் பள்ளியில் தினம் இரண்டு முட்டைகளை உணவுடன் சேர்த்து கொடுக்கிறார்கள். முட்டையில் ‘கோலைன்’ என்னும் பொருள் இருக்கிறது. அது மனித நினைவாற்றாலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். முட்டையை செரிமானம் செய்ய சுமார் 100 கலோரிகள் வரை செலவாகிறது. இதனால் வளர்சிதை மாற்றம் நன்றாகவே நிகழ்கிறது. இதனால் தான் உணவில் முட்டையை சேர்ப்பது மிகவும் நல்லாதகும். முட்டையுடன் ‘காப்சிக்கம்’ என்னும் குடைமிளகாயை சேர்த்து சாப்பிடுவது உடல் இடை குறைய ஒரு அருமையான வழிமுறையாகும். குடைமிளகாயில் ‘வைட்டமின் சி’யும் பொட்டாசியமும் அதிகளவில் உள்ளது. இந்த குடை மிளகாயில் இருக்கும் ‘கேப்சைசின்’ என்னும் பொருள் நமது உடம்பில் உள்ள ‘கார்டிசோல்’  ஹார்மோனை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது. உடலில் அதிகப்படியாக கொழுப்பு படிவதற்க்கு இந்த கார்டிசோல் ஹார்மோன் ஒரு காரணியாக உள்ளது. முட்டையுடன் குடை மிளகாயை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை தடுக்கலாம். இதன்மூலம் உடல் எடை அதிகமாகமல் பார்த்துக்கொள்ளலாம்.

மேற்கூறிய உணவுகளைக் கொண்டு ‘டையட்டை’ ஆரமிக்கும் முன் உங்களது மருத்தவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியமாகும்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியா-குடிகளும் அவர்கள் குடிப்பழக்கமும் 
குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்கு - ஆய்வு கூறுவது என்ன?
உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
மாரடைப்பைத் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடி மரணம் நிச்சயம்! எச்சரிக்கும் சமீபத்திய ஆய்வு!
முதுகுவலிதானே என்று அலட்சியம் வேண்டாம்.. உலகில் பெரும்பாலான ஊனத்திற்கும் இயலாமைக்கும் காரணம் இந்த மு...
மனிதர்கள் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை என்ன? ஆய்வு முடிவில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!
வயதுக்கேற்ப மாறும் தற்கொலைக்கான காரணங்கள்! காலம் மாறுகையில் காரணங்களும் மாறுகின்றன!! - ஆய்வு சொல்வதெ...
மது அருந்துதல் 60க்கும் மேற்பட்ட நோய்களிற்கு காரணம்: ஆய்வு
உடலுறவுக்குப் பிறகான செயல்பாடுகள் உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிக்கின்றன!! தம்பதிகளே தயாரா..?!
விட்டமின் சி மாத்திரைகளை அதிகம் எடுத்தால் சிறுநீரகப் பிரச்சினைகள் உண்டாகும்! கவனம் தேவை! 
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *