fbpx
LOADING

Type to search

தொழில்நுட்பம்

டிவிட்டர் அளவிற்கு திரெட் செயலி வளர்ச்சியடைவில்லையே ஏன்?

செய்தி சுருக்கம்:

டிவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்த ‘திரெட்’ செயலியில், தற்போது பாதிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் வெளியேறிவிட்டதாக அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுகர்பர்க் தெரிவித்துள்ளார்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

உலகப் பொருளாதாரம் மூலதனத்தை ஆதரிக்கிறது என்பதை மஸ்க் சற்று மறந்துவிட்டார் போலும். ‘மோனோபோலி’ ‘கேபிடலிசதிற்கு எதிரானது என்பதை உணர்ந்த மெட்டா நிறுவனர் மார்க், ‘திரெட் செயலி மூலம் டிவிட்டருக்கு போட்டியாக களத்தில் இறங்கினார். ஆரம்பமே அமர்க்களமாக இருந்தும், இவ்வளவு பயனாளர்கள் வெளியேற காரணம் என்ன?

பின்னணி:

சமூக வலைதளம் என்பது ஒரு இன்றியமையாத கட்டமைப்பாகும். இன்று அதில் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதை வணிக நோக்கதிற்காக மாற்றும் போது தான் பயனற்றுப்போகிறது. சமூக வலை, மக்கள் கூடும் ஒரு சந்தையைப் போல இருபதனால் பல விளம்பரங்கள் அதில் காட்டப்படுகிறது, வணிகங்கள் நடைபெறுகிறது. ஆனால் இந்த சமூக வலைதளத்தைப் பயன்படுத்த கட்டணம் வசூலித்தால்! அது தேவைக்கு அப்பாறப்பட்ட ஒன்றாக மாறிவிடுகிறது.

டிவிட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு வாங்கிய எலான் மஸ்க் அதனை எப்படியாவது செல்வம் கொழிக்கும் சுரங்கமாக மாற்ற வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் இவ்வளவு சுமையை அவர் தன் மேல் ஏற்றிக்கொள்ள வேண்டும்? டிவிட்டரின் அன்றைய மதிப்பு 20பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. தேவையில்லாமல் 22 மில்லியன் டாலர்கள் அதிகம் கொடுத்து வாங்கியிருக்கிறார். அதனை சரிகட்ட இப்போது மக்களிடம் இருந்து வசூலிக்கத் தொடங்கியுள்ளார்.

பொழுதுபோக்கிறக்காகப் பயன்படுத்தும் சமூக வலைதளத்திக்கு மாதத்  தவணை செலுத்த வேண்டுவது அவசியம் தானா? என்று நினைத்து தவித்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மார்க் ஜுகர்பர்க் அறிவித்தார். அதுதான் ‘திரெட்’ ஆப். டிவிட்டரின் போலி என்று அதைக் கூறலாம். திரெட்’ பார்க்கவும் பயன்படுத்தவும் அச்சு அசலாகவே டிவிட்டர் போலவே இருந்தது. ஒரு பக்கம் மஸ்க் கொடுத்த அழுத்தத்தில் தவித்த மக்கள் டக்கென்று ‘திரெட்’ பக்கம் தாவினர்.

ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் இருந்தால் போதும் என்ற ஒரு விஷயமும் திரெட் செயலியில் நுழைய பயனாளர்களுக்கு எளிமையாக இருந்தது. திரெட்’டை வெளியிட்ட அடுத்த ஐந்து மணி நேரத்தில் சுமார் 50 மில்லியன் மக்கள் அதனை தரவிறக்கம் செய்தனர். மக்களிடையே இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பல மீம்ஸ்கள் அதனையொட்டி ஷேர் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் காட்டும் அதிரடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உருவான ஒரு ஆப் என்று எல்லாரும் கருதினார்கள்.

எலான் மஸ்க் டிவிட்டரை கவிழ்த்த விதம்

டிவிட்டரை தனதாக்கியப் பிறகு எலான் மஸ்க் முதல் முறையாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பயனாளர்களே, டிவிட்டரில் இனி ‘ப்ளூ டிக்’ தொடர்ந்து உங்கள் கணக்கில் தெரியவேண்டும் என்றால் மாதம் இவ்வளவு கட்டவேண்டும் என்று அதில் சொன்னார். அதில் ஆரமித்தது டிவிட்டருக்கு தலைவலி.

மஸ்க் டிவிட்டர் பயனாளர்களுக்கு கொடுத்த அதிர்ச்சியை விட டிவிட்டர் நிறுவன ஊழியர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி மிக அதிகம். அவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் அந்நிறுவனத்தில் வேலை பார்த்த டாப் லெவல் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். பலர் தாங்களாகவே அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினர்.

சில நாட்கள் கழித்து மஸ்க்கிடம் இருந்து மீண்டும் ஒரு அறிவிப்பு. டிவிட்டர் மக்களே இனி ‘ப்ளூ டிக்’ வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 10,000 போஸ்ட் வரையில் தான் பார்க்க முடியும். அதேபோல ‘ப்ளூ டிக்’ இல்லாதவர்கள் 1000 போஸ்ட்கள் தான் பார்வையிட முடியும் என்றார். அதாவது மறைமுகமாக மக்களை சந்தா செலுத்த ஒரு திட்டத்தை வகுத்தார். ஆனால் அது ‘திரெட்’ செயலி மூலமாக முறியடிக்கப்பட்டது.

அடுத்து மஸ்க் செய்த ஒரு விஷயம் டிவிட்டரின் பாரம்பரியத்தை குலைப்பதாக அமைந்தது. ஆம் ஒரு பிராண்டிற்கு பெயரை விட அதன் லோகோ தான் முக்கியமானது, தனித்துவமானது. ஒரு மொபைல் போனை, ஆப்பிள் போன் தானா என்று கண்டுபிடிக்க அதன் பின்னால் இருக்கும் கடிக்கப்பட்ட ஆப்பிளின் லோகோவை நாம் பார்த்து உணர வேண்டும். அதற்கு தான் அவ்வளவு மதிப்பு. ஆப்பிள் லோகோ இல்லையென்றால் ஆப்பிள் போனுக்கு ஈடு இணையாகவே இருந்தாலும் அது மனதிற்கு ஒத்துவரதல்லவா. அது தான் ஒரு லோகோவின் ஆற்றல்.

டிவிட்டர் என்றாலே பறந்து செல்லும் நீலக் குருவி தான் நியாபாகத்திற்கு வரும். ஆனால் மஸ்கோ அதனை மாற்றி X என வைத்துவிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருமுறை  டிவிட்டர் பயன்படுத்திக்கொண்டிருந்த தனது மகனை தவறான செயலியை வைத்திருக்கிறாய் போலும் என்று கோபத்தில் அடித்துவிட்டார் அந்த அப்பா. அதன் பிறகு தான் அவருக்கு தெரியவருகிறது அது டிவிட்டரின் புதிய லோகோ என்று. இது போல பல நிகழ்வுகள் டிவிட்டர் லோகோவை சுற்றி நடந்திருக்கிறது.

டிவிட்டர் காலி, இனி ‘திரெட்’ செயலி தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் என்று கணிக்கும் பட்சத்தில் அது தவறாக சென்று முடிகிறது. ஆம், ஆர்வமாகவும் அதிவேகமாகவும் ‘திரெட்’ செயலியில் கணக்கை திறந்துவிட்டு இரண்டு நாட்கள் இருந்த நபர்கள், வந்த வேகத்தில் இடத்தை காலி செய்துள்ளார்கள். ‘திரெட்’ செயலியில் இப்போது பயனாளர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது என அந்நிறுவன உரிமையாளர் மார்க் தெரிவித்துள்ளார்.

பிசினஸில் ஒரு பழமொழி இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ ஒருவன் தொழிலாக உருவாக்கினால், நிச்சயம், சந்தையில் அவன் இரண்டாம் இடத்தில் தான் இருப்பான், என்று. அது திரெட்’ விஷயத்தில் உண்மையாகி விட்டது. டிவிட்டரை விட வசதிகள் பல கொடுத்தலும் திரெட்’ டிவிட்டருக்கு கீழே தான் என்றும் இருக்கும்.

காக்கா முட்டை என்னும் திரைப்படத்தின் இறுதிக் காட்சி மிகவும் பிரபலமானது. இரண்டு சிறுவர்கள் ‘பிசா’ தின்ன ஆசைப்பட்டு, காசில்லாமல் தனது பாட்டியிடம் காசு கேட்பார்கள். அதற்கு அந்தப் பாட்டி பிசாவைப் போலவே தோசையை ஊற்றி அதில் காய்கறிகளை மேலே வைத்து அலங்கரித்துக் கொடுக்கும். அதை அவர்கள் சாப்பிடுவார்கள். இருந்தாலும் அந்த சிறுவர்களுக்கு பிசாவை ருசிக்க வேண்டும் என்று ஆசை விடாமல் இருந்துகொண்டே இருக்கும்.

படத்தின் இறுதிக் காட்சியில் அச்சிறுவர்களுக்கு ‘பிசா’ சாப்பிட கிடைக்கும். அதை ஆர்வத்துடன் ஒரு வாய் சாப்பிட்டு அதில் ஒருவன் சொல்லுவான். இதுக்கு நம்ம ஆயா சுட்டு கொடுத்த தோசையே நல்லா இருந்ததுல என்று. அதுபோல தான் இந்த செயலி சண்டையிலும் பயனாளர்களுக்கு நடந்தது. என்னதான் ‘திரெட்’ புத்தம் புதியதாக பிசா போல இருபினும் டிவிட்டர் ஆயா சுட்ட தோசையைப் போல பலருக்கும் பிடித்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள் :

உலகில் முதன்முறையாகப் பெண்ணின் மூளைக்குள் மலைப்பாம்பின் ஒட்டுண்ணி உயிருடன் கண்டுபிடிப்பு
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை எங்கே கொண்டு செல்கின்றன?
நொடிப்பொழுதில் கட்டுரை எழுதி தரக்கூடிய ChatGPT செயலியின் நுண்ணறிவு திருடப்பட்டு கட்டமைக்கப்பட்டதா? -...
ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரனை அடையும்  சந்திராயன் 3..!! இஸ்ரோ தலைவர் அறி...
போலி செய்திகளும்; மனித நம்பிக்கையும்
செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவி...
நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியது - பிரயாணக்களைப்பு தீர 18 நாட்கள் ஓய்வெடுக்க போகும் சந்திராய...
மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை
‘த்ரெட்ஸ்’ செயலியின் இலச்சினை தமிழ் எழுத்தான ‘கு’ வடிவில் உள்ளதா?
அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்: அதிர்ச்சி ரிப்போர்ட்
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *