இலங்கை: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கியை காட்டிய பொலிஸ்

செய்தி சுருக்கம்:
சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியை குறிவைத்தவர் உண்மையிலேயே பொலிஸ் புலனாய்வு அதிகாரிதான் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரின் அடையாளத்தை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, ஶ்ரீலங்கா பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்கள் தண்டனையின்றி இடம்பெறுகின்றன இது இலங்கையில் மனித உரிமைகளை கடுமையான ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளன.
பின்னணி:
கடந்த வெள்ளிக்கிழமை (2 யூன்) வடமராட்சி கிழக்கு கிரிக்கெட் கழகத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் அப்பகுதிக்கு வருகை தந்திருந்தார்.
மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் மரத்தின் நிழலில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அழைக்கப்படாமல் எம். பி. யின் பின்னால் அமர்ந்திருந்தனர். சந்தேகதிற்கிடமான இந்த நபர்களை விசாரிக்க முற்பட்ட போது இடம்பெற்ற வாக்குவாதத்தின் போதே இந்த சம்பவம் இடம் பெற்றது.