ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வாஷிங்டன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்கிரகோர் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளார். மாஸ்கோவிற்கும் கீவ்விற்கும் இடையிலான பகைமையின் உண்மையான நிலையை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தத் தவறிவிட்டன என்று கூறிய அவர், கீவ்வின் எதிர்த்தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றும் உக்ரைன் கடந்த மாதத்தில் குறைந்தது 40 ஆயிரம் படை வீரர்களை இழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதேவேளையில் உக்ரேனிய மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன என்றும் […]
காலச்சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கிறது. நாகரிகமும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் மனிதர்களிடையே மட்டும் சமூகப் பொருளாதாரச் சமநிலை என்பது இன்றும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மை என்பது இன்று நேற்றல்ல, மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. காலப்போக்கில் மனிதர்களின் தனிப்பட்ட செல்வவளத்தின் காட்சிகளினூடே நாம் பயணித்தோமானால் இந்தச் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வின் வரலாற்றை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். வாருங்கள் பயணிப்போம். இரும்புக் […]
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதம மந்திரி மனாசே சோகவரே ஆகியோர் இம்மாதம் பத்தாம் தேதியன்று பிற்பகல் ஒரு விரிவான மூலோபாயக் கூட்டாண்மையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். சாலமன் தீவுகளுடனான உறவைப் பலப்படுத்தும் சீனாவின் இந்தப் புவிசார் அரசியல் நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம். தெற்குப் பசிபிக் கடலில், 900 குட்டித் தீவுகளை உள்ளடக்கிய சாலமன் தீவுகள் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவிலிருந்து 9,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. […]
2021 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை ஆசியாவின் ‘பவர் ஹவுஸ்’ என்று அறியப்படும் இந்தியா பெற்றுள்ளது. வரும் 2075 ஆம் ஆண்டுக்குள் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது விளங்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மையின் விளைவாக உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருவது கண்கூடு. உலகளவில் மிகப் பெரும் […]