“அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைவர் வேட்பாளர் விவேக் ராமசாமி தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எனது இசையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்”, என்று ராப் சூப்பர்ஸ்டார் எமினெம் கோரியுள்ளார். இசை நிறுவனமான பிஎம்ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் எமினெம்மின் இசையைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை இனி விவேக் ராமசாமியின் பிரச்சாரத்திற்கு வழங்க மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து விவேக் ராமசாமி, மார்ஷல் மாதெர்ஸ் III என்ற இயற்பெயரைக் கொண்ட எமினெம்மின் கோரிக்கைக்கு […]
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்துள்ளது. போதுமான ஆழம் இல்லாததால் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் இரு பக்கங்களிலும் 135க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் முடங்கிக் கிடப்பதாகத் தெரியவந்துள்ளது. பனாமா கால்வாய் பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கை கால்வாய். அமெரிக்கக் கண்டத்தின் நடுவில் இருக்கும் குறுகிய நிலப்பரப்பு வழியாக இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரிலிருந்து அதற்கு எதிர் […]
லாரலில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் இந்த ஆண்டு நடந்த ஐஇஇஇ(IEEE) ஒருங்கிணைந்த ஸ்டெம் கல்வி மாநாட்டில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த உயர்நிலைப் பள்ளி உயிரியல் மருத்துவப் பொறியியல் மாணவியான அர்ச்சிஷ்மா மர்ராப்பு மருந்துகளை நோயாளிகள் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர் என்னும் கண்டுபிடிப்பு பற்றிய விளக்கப் படத்தை வழங்கினார். இதற்காக இந்த மாநாட்டில் அவர் டெக்னிக்கல் எக்சலென்ஸ் விருதைப் பெற்றார். மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே தனது தொழில்நுட்பத் திறன்களைப் […]
ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வாஷிங்டன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்கிரகோர் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளார். மாஸ்கோவிற்கும் கீவ்விற்கும் இடையிலான பகைமையின் உண்மையான நிலையை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தத் தவறிவிட்டன என்று கூறிய அவர், கீவ்வின் எதிர்த்தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றும் உக்ரைன் கடந்த மாதத்தில் குறைந்தது 40 ஆயிரம் படை வீரர்களை இழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதேவேளையில் உக்ரேனிய மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன என்றும் […]
உலகின் மூன்றாவது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு அமெரிக்கா. வட அமெரிக்கக் கண்டத்தில், அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளை உள்ளடக்கிய ஐம்பது மாநிலங்களையும், ஒரு குடியரசு மாவட்டத்தையும் கொண்டுள்ள அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 331 மில்லியன் ஆகும். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் தெரிய வந்துள்ளது. கி.பி. 1776 ஆம் ஆண்டுக்குப் […]