காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் பெரிய பாலைவனமான ‘தார் பாலைவனம்’ இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலும் மறைந்துவிடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகின் இருபதாவது பெரிய பாலைவனம் மற்றும் உலகின் ஒன்பதாவது பெரிய வெப்பமண்டலப் பாலைவனமான ‘பெரிய இந்தியப் பாலைவனம்’ என்று அழைக்கப்படும் ‘தார்’ பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாகிஸ்தான் நாட்டிலும் இப்பாலைவனம் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கிறார்கள். இப்பாலைவனத்தின் பெரும்பகுதி […]