இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் […]
செய்தி சுருக்கம்: சிங்கப்பூரில் வாழ்கின்ற தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் சிறப்புகளையும் அதன் தொன்மை வாய்ந்த கலாச்சார பெருமைகளையும் கொண்டு சேர்ப்பதற்காக சிங்கப்பூரின் Tamil Language Council (TLC) அமைப்பினால் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற தமிழ் இளைஞர் திருவிழாவின் மூன்றாமாண்டு கொண்டாட்டங்கள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து எட்டு நாட்கள் பல கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு ஈவன்ட்கள் கொண்டதாக இந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, செப்டம்பர் 10 ஆம் தேதி […]
சமையல் பற்றிய விளையாட்டு என்றவுடன் பொதுவாக நமக்குத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பல்வேறு விதமான ‘ரியாலிட்டி ஷோக்கள்’ நினைவுக்கு வரலாம். இரக்கமற்ற நடுவர்களுடன் அவர்களுடைய சவால்களைச் சமாளிக்கும் கோமாளிகளாக மாறும் பங்கேற்பாளர்கள் ஞாபகத்தில் வரலாம். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதுதான் ‘வெண்பா’. வெண்பா என்பது ஒரு சமையல் வீடியோ விளையாட்டு. இந்தியாவை விட்டு வெளியேறிக் கனடாவில் வாழ்க்கை நடத்தும் வெண்பா என்னும் தமிழ்ப் பெண் தனது கணவர் பாவலனுடனும் பொருளாதாரச் சிக்கலுடனும் தனது ஒரே மகனான கவினை அந்த […]
ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழ் வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் சங்கரி சந்திரன் தனது ‘சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ்’ (Chai Time at Cinnamon Gardens) என்னும் நாவலுக்காக 60 ஆயிரம் டாலர் மதிப்பிலான ஆஸ்திரேலியாவின் மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருதை வென்றுள்ளார். கடந்த செவ்வாயன்று சிட்னியில் உள்ள தி ஓவோலோ ஹோட்டலில் நடந்த விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இந்த நாவல் 1980 களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டை விட்டு […]
உலகில் பேசப்படும் ஆறாயிரம் மொழிகளில் உயர்தனிச் செம்மொழியாக விளங்குவது நமது தாய்மொழியான தமிழ்மொழி மட்டுமே. காலங்களில் மூத்ததும் பழமையானதும் என்பது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை. தமிழ்மொழியின் இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் வேறெந்த மொழியிலும் இல்லாதவை. தமிழறிஞர் கா. சிவத்தம்பி, ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் இருக்கிறது’ என்பார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில் உள்ள சொற்கள் பலவும் இன்னும் நம்மால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அளவிற்குத் தொடர்ச்சியான மரபு கொண்ட […]