மாரடைப்பு ஏற்படும் ஒருவருக்குத் தொடரும் அடுத்த ஆண்டில் மிதமான அல்லது தீவிரமான வலி ஏற்பட்டால் அந்த வலி ஏற்படாதவரைக் காட்டிலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அதிகம் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் மாரடைப்புக்குப் பின் வரும் அடுத்த ஆண்டில் கடுமையான வலியை அனுபவிப்பவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இறப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்றும் அந்த வலி அவர்களின் இதய நிலையுடன் தொடர்புடையதாக […]
மன அழுத்தம் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை, நாட்டின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. உலகில் இன்று அதிகம் பேசப்படும் உளவியல் பிரச்சினை இதுதான். ஒரு சிலர் எப்பொழுதுமே மன அழுத்தத்துடன் இருப்பார்கள். கேட்டால் அதிக வேலைப்பளு, குடும்பம், தனிப்பட்ட பிரச்சினைகள் என்று கூறுவார்கள். வேறு சிலர் குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் மன அழுத்தத்துக்கு ஆட்படுவார்கள். எடுத்துக்காட்டாக மாணவர்கள் பரீட்சை, […]