இந்திய நாட்டுச் சட்டங்களில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அறியப்படும் சட்டங்கள் என்பவை சிவில் சட்டம் எனப்படும் உரிமையியல் சட்டங்களும் கிரிமினல் சட்டம் எனப்படும் குற்றவியல் சட்டங்களும்தான். இவற்றுள் உரிமையியல் சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் குற்றவியல் சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்குத் தேவையான கால அவகாசம் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதிலும் ஒரு குற்ற நிகழ்வில் ஒருவர் பாதிக்கப்படும்போது அதை ஏற்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பது […]