உங்கள் நண்பர் வட்டாரத்தில் சிலர் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய அறிவுமுழுவதும் பழையதாக இருக்கும். அதாவது, இதற்குமுன் உலகத்தில் என்ன நடந்தது என்பதைமட்டும்தான் அறிந்துகொண்டிருப்பார்கள், இப்போது என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குச் சிறிதும் தெரியாது. பழைய அறிவின் அடிப்படையில்தான் அவர்கள் செயல்படுவார்கள். இன்னும் சிலர் மாறிவரும் உலகத்தில் என்னவெல்லாம் புதிது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். புதிதாக வந்துள்ள படங்கள் என்ன, மக்கள் விரும்பிக் கேட்டு மகிழ்கிற பாடல்கள் எவை, எந்த ஊருக்கு எப்போது செல்லலாம், என்னென்ன […]