பெரும்பாலும் நாம் ஒரு ஆப்பை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்யும்போது அது கேட்கும் அனுமதிகளை கண்ணைமூடிக்கொண்டு அளித்துவிடுகிறோம். அந்த ஆப் நமது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்களை பார்க்க அனுமதி கேட்கும், நமது மொபைல் கேமராவை இயக்க அனுமதி கேட்கும், நமது ஜியோ லொகேஷனை அறிந்து கொள்ள கேட்கும் – அனைத்திற்கும் நாம் பெரிய மனதோடு அனுமதியை அளித்திருப்போம். நமது இந்த செய்கை நமக்கு எத்தகைய பின்விளைவுகளை பின்னாளில் கொண்டுவரப்போகிறது என்பதை நாம் உணரவில்லை என்பதையே தற்போதைய […]
செய்தி சுருக்கம்: டிவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்த ‘திரெட்’ செயலியில், தற்போது பாதிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் வெளியேறிவிட்டதாக அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுகர்பர்க் தெரிவித்துள்ளார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? உலகப் பொருளாதாரம் மூலதனத்தை ஆதரிக்கிறது என்பதை மஸ்க் சற்று மறந்துவிட்டார் போலும். ‘மோனோபோலி’ ‘கேபிடலிசதிற்கு எதிரானது என்பதை உணர்ந்த மெட்டா நிறுவனர் மார்க், ‘திரெட் செயலி மூலம் டிவிட்டருக்கு போட்டியாக களத்தில் இறங்கினார். ஆரம்பமே அமர்க்களமாக இருந்தும், இவ்வளவு பயனாளர்கள் வெளியேற காரணம் என்ன? […]
செய்தி சுருக்கம்: சமூக ஊடகத்தின் மீதான ஈர்ப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் யூடியூப்பை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். 46 கோடியே 70 லட்சம் இந்தியர்கள் யூடியூப் தளத்தை பயன்படுத்துகிறார்கள். உலக அளவில் தனி படைப்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 18 சதவீதம் உயரும் நிலையில் இந்தியாவில் அது 115 சதவீதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சமூக ஊடகதளங்களில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கையும், அவற்றை பார்த்து ரசிப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. ஏன் இது […]
இன்றைய இளைஞர்களுக்கு உணவு உடை ஆகியவற்றுக்குப் பின் உறைவிடமாய் இருப்பது சமூக வலைத்தளங்கள்தான். பரந்துபட்ட இந்த யதார்த்தமான உலகிலிருந்து விலகி சுருங்கிக் கிடக்கும் அந்த மாய உலகில்தான் அவர்கள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அவர்களுடைய உலகமே தனி உலகமாகிவிட்டது. ஆனால் அவற்றிலிருந்து அவர்களால் வெளிவர இயலாத அளவுக்கு அடிமைகளாகிவிட்டதுதான் பெரும் வேதனை. உலக அளவில் 210 மில்லியன் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இளைஞர்களின் […]
மெட்டா நிறுவனத்தின் ‘த்ரெட்ஸ்’ என்னும் செயலி இந்த ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. ட்விட்டர் போன்றே ‘டெக்ஸ்ட்’ அதாவது எழுத்து மூலம் கருத்தைப் பகிரும் சமூக வலைத்தளமான இது ‘ட்விட்டர் கில்லர் செயலி’ எனத் தற்போது அழைக்கப்படுகிறது. ஏன் தெரியுமா? டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அவரது […]