தொடர்ச்சியாக உடல் பறப்பது, தளர்வது போல பற்கள் வெடிப்பது போல அல்லது மலை உச்சியிலிருந்து விழுவது,பள்ளி அல்லது வேலைக்கு தாமதமாக ஓடுவது, பஸ்,ட்ரெயின், பிளைட் மிஸ் செய்வது போன்ற கனவுகள் வருகிறதா? அந்த கனவுகள் என்ன சொல்ல வருகிறது என்று யோசித்தது உண்டா? தொடர் கனவுகள் பற்றி ஆய்வாளர்களும் மருத்துவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். “திரும்பத் திரும்ப வரும் கனவுகள் மிகவும் ஆழமான வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் உங்களில் ஒரு பகுதியாக இருக்கும் நிஜ வாழ்க்கையில் மீண்டும் […]
செய்திச் சுருக்கம் தூக்கத்தைப்போல உடலுக்கு ஓய்வு தரும் வேறு உண்டா இவ்வுலகில்? அமைதியான சூழலில் ஒரு 20 நிமிடங்கள் உறங்கி எழுவது நமது ஆற்றலைப் புதுப்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில், 20 நிமிட குட்டித் தூக்கம் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கண்டறிந்துள்ளனர். ஸ்லீப் ஹெல்த் ஜர்னலில் சமீபத்தில் வெளியிட்ட, UCL மற்றும் உருகுவேயில் உள்ள குடியரசு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் […]
பூனைத் தூக்கம், கோழித் தூக்கம், கண்ணயர்தல், மதியத் தூக்கம், பகல் நேரத் தூக்கம், குட்டித்தூக்கம் என்று பலவாறு கூறப்படும் சில மணித்துளித் தூக்கத்தை ‘பவர் நாப்’(Power Nap) என்று சொல்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் குட்டித் தூக்கமானது வயதானாலும் நமது மூளையைப் புத்துணர்வோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்க உதவுவதோடு மட்டுமின்றி உடல் சோர்வையும் நீக்கும் என்கிறார்கள் லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரி மற்றும் உருகுவே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். “நேரத்தைத் தூங்கிக் கெடுப்பது நல்லதா?” என்று நீங்கள் கேட்கலாம். […]
மெலட்டோனின் என்பது உலகெங்கிலும் பரவலான அறியப்படும் ஒரு துணைப்பொருள். தூக்கம் வராமல் தவிக்கும் மக்கள் தற்போது அதிக அளவில் மெலட்டோனினைப் பயன்படுத்த் தொடங்கியுள்ளனர். பல ஆய்வுகள் 1999 முதல் 2018 வரை அனைத்து மக்கள்தொகைக் குழுக்களிலும் மெலட்டோனின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது எனக் காட்டுகின்றன. வயதுவந்த மக்களிடையே ஒட்டுமொத்த மெலட்டோனின் பயன்பாடு இன்னும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மெலட்டோனின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பல மடங்கு அதிகரிப்பை ஆய்வுகள் ஆவணப்படுத்துகின்றன. மெலட்டோனின் என்றால் […]