செய்தி சுருக்கம்: ராஜஸ்தானிலுள்ள ஜெய்சால்மரில் டைனசோரின் தொல்லியல் எச்சம் என்னும் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால இப்புதைபடிவங்களை ரூர்கியிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் இந்திய புவியியல் கணக்கெடுப்பு நிறுவனத்தை சார்ந்த விஞ்ஞானிகள் அகழ்ந்தெடுத்துள்ளனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இந்தியாவிலுள்ள தார் பாலைவனத்தில் இந்த புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளபடியினால் விஞ்ஞானிகள் இதற்கு தாரோசாரஸ் இண்டிகஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த புதைபடிவங்கள் 2018ம் ஆண்டில் சேகரிக்கப்பட்டாலும், இரண்டு நிறுவனங்களையும் சேர்ந்த ஆறு ஆராய்ச்சியாளர்கள், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் […]