அமெரிக்காவில் இனவெறியோடு துப்பாக்கிக் கலாச்சாரமும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது அமெரிக்காவுக்குப் புதிதல்ல என்றாலும் தற்போதைய துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் வேகம் அந்நாட்டை அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மீண்டும் மீண்டும் நடக்கும் இத்தாக்குதல்களால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் மற்ற நாடுகளுக்கு மனித உரிமைகள் பற்றிய பாடம் எடுக்கும் அமெரிக்கா, தனது நாட்டில் நடக்கும் இந்த மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியாமல் தவிக்கிறது என்றே சொல்ல வேண்டும். அங்கே […]
செய்தி சுருக்கம்: இந்த உலகத்தில் ஒவ்வொன்றிற்கும் சாசுவதமான நிறம் ஒன்று உள்ளது. நிலம் என்றால் அது பசுமையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். வானமும் கடலும் நீலமாக இருந்தால்தான் எல்லாம் சரியாக இருக்கின்றன என்று அர்த்தம். கடந்த 20 ஆண்டுகளில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட கடல்கள் பச்சை நிறமாக மாறி உள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக இவ்வாறு நிகழ்கிறதா என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இது […]
செய்தி சுருக்கம்:முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுபடுத்த கடுமையாக போராடி வரும் நிலையில் அடுத்த அச்சுறுத்தல் ஆரம்பமாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காற்று மாசு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்ட பின்பு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு காற்று மாசும் ஒரு முக்கியமான காரணம் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. காற்று மாசுபடுவதற்கு காரணம்: வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகள், சுத்திகரிக்க முடியாத எரிபொருட்களை […]
நமக்கு நன்றாக நினைவிருக்கும், சென்ற தலைமுறை காலத்தில் பருவ மழைக்காலங்கள் என்பவை குளிரான, நச நச என்று மழை தூரிக்கொண்டே இருக்கின்ற நாட்களாக இருந்தன. மழைக்காலம் முழுவதும் மழையாகவே இருக்கும். துணிகள் காயாது, வெளியே விளையாட இயலாது. மழையில்லை என்றாலும் மேகமூட்டம் குறையாது. சூரியனை பார்க்கவே முடியாது. இன்றைய காலகட்டத்தில் அப்படியெல்லாம் இல்லை என்பது கண்கூடு. மழைக்காலம் என்பது மழையும் வரும் ஒரு காலம் என்றாகிவிட்டது. திடீரென்று மேகம் கூடி மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிட்டுச் […]
செய்திச் சுருக்கம்: உண்மையில் பாதுகாப்பான காற்று மாசு என்று ஒன்று இல்லை. அனைத்து அளவிலான காற்று மாசுக்களும் வளர்இளம் பிள்ளைகளின் மூளையை பாதிக்கிறது என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? உலகமெங்கும் காற்று மாசு நாளுக்கு நாள் பெருகிவரும் இச்சூழலில் அனைத்து அரசாங்கங்களும், ஆய்வு நிறுவனங்களும் காற்றில் கலந்துள்ள மாசின் அளவை பாதுகாப்பானது என்றும் பாதுகாப்பான நிலையை மீறிய ஆபத்தான அளவு என்றும் வகைப்படுத்தி வந்துள்ளன. பொதுமக்களும் செய்திகளில் காட்டப்படும் அளவுகளைக் கொண்டு […]