பெண்களின் கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளானவை, அவர்களின் இனப்பெருக்க அமைப்புகளில் தோன்றும் சாதாரண பருக்கள் போன்றவைதான். இந்த நீர்க்கட்டிகள், பெரும்பாலான பெண்களின் மாதவிடாய் காலச் சுழற்சியோடு அடிக்கடி வருவதும், போவதும் உண்டு. அப்பருக்களில், நீர் போன்ற திரவம் நிறைந்திருப்பதால்தான் அடிப்படையில் அவை நீர்க்கட்டிகள் என்றே அழைக்கப்படுகின்றன. நீர் போலத் தோன்றும், திசு நிரப்பப்பட்ட அந்தப் பருக்கள் பொதுவாக பலருக்கும் இயல்பாகத் தோன்றுவதுதான். ஆனால், சிலரது உடல்நிலை செயல்பாடுகளைப் ப்ருத்த மட்டில், அவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. […]