உணவகத்தில் நுழைகிறோம், பிடித்த உணவுப்பொருள் ஒன்றை ஆர்டர் செய்கிறோம். ஐந்து நிமிடத்தில் சர்வர் அந்தப் பொருளைக் கொண்டுவந்து வைக்கிறார், எடுத்துச் சாப்பிடுகிறோம். ‘எப்படி இருக்கு?’ என்று உடன் வந்தவர் கேட்கிறார். உடனடியாக நம் நாக்கில் தோன்றும் சொல் என்ன? ‘நைஸ்!’ இன்றைய நம் பேச்சில் மிக இயல்பாகக் கலந்துவிட்ட சொல் நைஸ். நல்ல உணவானாலும் சரி, அழகான ஓவியமானாலும் சரி, உருகவைக்கும் கவிதையானாலும் சரி, கைதட்டவைக்கும் சொற்பொழிவானாலும் சரி, ‘நைஸ்’ என்று சொல்லிவிடுகிறோம். இந்தச் சொல்லுக்கு உண்மையில் […]