பெற்றோர்களாகிய நாம் எப்போதும் பிசியாக இருக்கிறோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத்தான் நாம் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிறோம். உண்மை. அக்குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டில் உண்டாக்கி வைத்திருக்கிறோம். பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும், இன்றெல்லாம் அனைவருமே வீட்டில் மொபைல் போன் வைத்திருக்கிறோம். அதை நம் குழந்தைகள் கையில் கொடுத்து அவர்கள் அதை உபயோகப்படுத்தும் அழகை ரசிக்கிறோம். ஒருகட்டத்தில் மொபைல் போன் என்பது நம் குழந்தைகளைச் சாப்பிட வைக்க, அவர்கள் அழுது அடம்பிடிக்காமல் ‘சமத்தாக’ இருக்க, வீட்டை […]