ஓரு கிரகத்தில் தற்போது காணப்படும் நில அமைப்புகளைக் கொண்டே அக்கிரகம் கடந்துவந்த பாதையை கணிக்க இயலும். அதீத வெப்பத்தாலும், விண்வெளி நிகழ்வுகளாலும் ஒரு கிரகத்தில் உள்ள நீர் நிலைகள் ஆவியாகி மறைந்து போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நீர் ஓடிய தடங்களும், தேங்கி நின்ற இடங்களும் அக்கிரகத்தில் நீர் வளம் ஒரு காலத்தில் இருந்ததை நமக்கு வெளிப்படுத்தும். நமது சூரியக் குடும்பத்திலேயே மிக உயரமான எரிமலை செவ்வாய் கிரகத்தில்தான் உள்ளது. ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது அவ்வெரிமலையின் பெயர். இந்த […]
உலக விண்வெளி அரங்கில் இந்தியா தனது சந்திராயன் -3 ஐ வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதித்துள்ள இந்த சூழலில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களைச் செய்யத் தேவைப்படும் அடிப்படையான விசயங்களைப் பற்றிய புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. கணினி உருவகப்படுத்துதல் முறை மூலம் செவ்வாய் கிரகத்தில் 28 ஆண்டுகள் தங்கியிருக்க எந்தமாதிரியான குண நலன்களைக் கொண்ட மனிதர்கள் தேவை என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த முன்மாதிரி செவ்வாய் கிரக குடியேற்றத்திற்கு வெறும் 22 பேர் மட்டுமே இருந்தால் போதுமாம். […]
செய்தி சுருக்கம்: செவ்வாய் கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட ஆறுகள் ஓடிக்கொண்டிருந்ததாகவும், சனி கிரகத்தின் துணைகோள்களுள் ஒன்றான டைட்டானில் இப்போதும் மீத்தேன் ஆறுகள் ஓடுவதாகவும் புதிய தொழில்நுட்பம் மூலம் அமெரிக்க நிலவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? நாசா அனுப்பிய காஸினி என்ற விண்கலம் சனி கிரகத்தின் துணைகோளான டைட்டானிலுள்ள ஆறுகளை படம் எடுத்து அனுப்பியது. இந்தப் படங்களைப் பார்த்த பின்னர் விஞ்ஞான குழுவினருக்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆர்வம் தோன்றியது. […]
செய்தி சுருக்கம்: MOXIE என்று பெயர் கொண்ட டிபன் பாக்ஸ் அளவுள்ள ஒரு இயந்திரத்தை கொண்டு, கார்பன் டை ஆக்சைடு நிறைந்து காணப்படும் செவ்வாயின் மேலடுக்கில் உள்ள காற்றினை உறிஞ்சி அதிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் பரிசோதனையில் முதற்கட்ட வெற்றியை அடைந்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். செவ்வாய் கிரகத்தின் மீது வெகுநாட்களாக நடத்தப்பட்டு வந்த ஆக்சிஜன் கண்டறியும் சோதனைகளில் இந்த வெற்றியானது மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. Perseverance விண்கலம் அனுப்பிய தகவல் இந்நிகழ்வினை உறுதி செய்துள்ளது. MOXIE (Mars […]
விண்வெளி ஆராய்சிக்காக,உலகிலுள்ள ஒவ்வொரு நாடுமே தனக்கென ஒரு பிரத்யேக ஏஜென்சியை உருவாக்கி நடத்தி வருகின்றன. இந்தியாவிலும் கூட, அது இஸ்ரோ (ISRO) எனும் பெயரில் இயங்கி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதே போன்ற, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்தான் நாசா. (NASA – National Aeronautics and Space Administration). சர்வதேச அரங்கில், அமெரிக்காவனது அரசியல் உள்ளிட்ட எல்லா விசயங்களிலும் முக்கியமான ஒரு நாடாகத் திகழ்வது போலவே, விண்வெளி பற்றிய அனைத்து ஆராய்ச்சிகளிலும் அதன் […]