ஓரு கிரகத்தில் தற்போது காணப்படும் நில அமைப்புகளைக் கொண்டே அக்கிரகம் கடந்துவந்த பாதையை கணிக்க இயலும். அதீத வெப்பத்தாலும், விண்வெளி நிகழ்வுகளாலும் ஒரு கிரகத்தில் உள்ள நீர் நிலைகள் ஆவியாகி மறைந்து போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நீர் ஓடிய தடங்களும், தேங்கி நின்ற இடங்களும் அக்கிரகத்தில் நீர் வளம் ஒரு காலத்தில் இருந்ததை நமக்கு வெளிப்படுத்தும். நமது சூரியக் குடும்பத்திலேயே மிக உயரமான எரிமலை செவ்வாய் கிரகத்தில்தான் உள்ளது. ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது அவ்வெரிமலையின் பெயர். இந்த […]