தமிழ்நாட்டில் மதுரையில் இருந்து தென் கிழக்கே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சங்க காலத்தைத் சேர்ந்த படிக குவார்ட்ஸ் எடை அலகு ஒன்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கீழடியில் நடைபெற்ற ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வில் இந்த எடை அலகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பதாம் கட்ட ஆய்வுப் பணியை முதல்வர் முக ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் […]