தேனீக்கள் இயற்கையின் காதல் தூதர்கள். மலர்களுக்கிடையில் மகரந்தத்தைப் பரிமாறி இயற்கை துளிர்க்க உதவும் அறுபுதமான உயிர்கள். உலகம் போகும் வேகத்தில் யானைகள் போன்ற பேருயிர்களே காட்டாற்றில் சிக்கிய கட்டெறும்புகள் போல அல்லல் படும் இச்சூழலில் தேனீக்கள் போன்ற சிற்றுயிர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவைகள் சிற்றுயிர்களாய் இருப்பதாலேயே அவை படும் பாடு நம் கண்களுக்குத் தெரிவதும் இல்லை. புலிகள் அழிந்தால் காடுகள் அழியும் என்று சொல்வார்கள். அதுபோல தேனீக்கள் இந்த பூமியிலிருந்து மறைந்தால் மனித இனம் […]