செய்தி சுருக்கம்: யாழ்ப்பாணம் கதுருகொட (கந்தரோடு) ஆலயத்தின் அருகில் உள்ள பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது ஐந்து லக்ஷ்மி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஜெர்மனியைச் சேர்ந்த தொல்பொருள் அதிகாரிகள் குழு இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர். பின்னணி: இந்த இடத்தில் கடந்த ஒரு மாதமாக அகழாய்வு நடந்து வருகிறது. கதுருகொட விகாரைக்கு அருகில் ஒரே இடத்தில் […]