சமையல் பற்றிய விளையாட்டு என்றவுடன் பொதுவாக நமக்குத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பல்வேறு விதமான ‘ரியாலிட்டி ஷோக்கள்’ நினைவுக்கு வரலாம். இரக்கமற்ற நடுவர்களுடன் அவர்களுடைய சவால்களைச் சமாளிக்கும் கோமாளிகளாக மாறும் பங்கேற்பாளர்கள் ஞாபகத்தில் வரலாம். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதுதான் ‘வெண்பா’. வெண்பா என்பது ஒரு சமையல் வீடியோ விளையாட்டு. இந்தியாவை விட்டு வெளியேறிக் கனடாவில் வாழ்க்கை நடத்தும் வெண்பா என்னும் தமிழ்ப் பெண் தனது கணவர் பாவலனுடனும் பொருளாதாரச் சிக்கலுடனும் தனது ஒரே மகனான கவினை அந்த […]