செய்தி சுருக்கம்: டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் பாதுகாப்பாக மகதானில் தரையிறங்கியதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னணி: இந்த விமானத்தில் 216 பயணிகளும், 16 விமான ஊழியர்களும் இருந்தனர். பயணிகளுக்கு தரையில் அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் சென்றடைய மாற்று வழிகள் வழங்கப்படும்.என்றும் அந்த விமானம் தரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.