English: flax seeds (noun) Tamil: ஆளி விதைகள் (பெயர்ச்சொல்) லினம் உசிட்டாடிஸ்சிமம் (Linum usitatissimum) என்னும் தாவரப் பெயர் கொண்ட ஆளிச் செடி (flax), அதன் நாருக்காகவும் விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. ஆளிச் செடியின் இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் துணி, லினன் (linen) எனப்படுகிறது. ஆளி விதைகளை தயிர், காய்கறி மற்றும் பழக் கலவைகள், பச்சடிகள், சாறுகள், வேகவைத்த பொருட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் எளிதாகச் சேர்த்து உண்ணலாம். உலர்ந்த, பழுத்த ஆளி விதைகளிலிருந்து ஆளிவிதை எண்ணெய் (linseed […]