செய்தி சுருக்கம்: சமீபத்தில் வேர்ல்டு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (World of Statistics) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியலில், உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியால் வழிநடத்தப்படுகின்றன என்று சொல்லப்பட்டது. இதில் ஆல்பபெட் தலைவர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட், யூடியூப் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களும், சத்யா நாதெள்ளா, நீல் மோகன் மற்றும் சாந்தனு நாராயண் ஆகியோர் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இன் […]
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கும் ஏற்றுமதிக்கும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டெஸ்லா நிர்வாகிகள் இந்தியாவுக்கு வருகை தந்து இந்தியாவில் கார்கள் மற்றும் பேட்டரிகள் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவுதல் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்தியாவில் கணிசமான முதலீட்டை செய்ய விரும்புவதாகக் கூறினார். இதையடுத்து […]
செய்தி சுருக்கம்: விண்வெளியில் செயல்படாத செயற்கைக்கோள்கள் மற்றும் உதிரிபாகங்கள் போன்றவையே விண்வெளிக்குப்பைகள் என்று அழைக்கப்படுகின்றன. செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களின் மீது மோதுதல், கட்டுப்பாட்டை இழந்து பூமியில் வந்து விழுதல் என்று இந்த விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் பாதிப்புக்கு பஞ்சமில்லை. மாறாக, செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பைப் பற்றி இப்பொழுது செய்தி வெளியாகியிருக்கிறது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கணக்கு வழக்கின்றி விண்ணில் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. இத்தகைய செயற்கைக்கோள்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சால் ரேடியோ […]