இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் […]
வயதாவதைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் இதனால் மனிதர்கள் ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ முடியும் எனவும் மூலக்கூறு பயோ ஜெரொண்டோலஜித் துறையின் பேராசிரியர் மாகல்ஹேஸ் கூறுகிறார். இதெல்லாம் சாத்தியமா, சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்கிறீர்களா? ஆனால் அந்தப் பேராசிரியர் இதை உறுதியாகக் கூறுகிறாரே. வாருங்கள் அவர் என்னதான் கூறுகிறார் எனப் பார்ப்போம். இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு ஜெரொண்டோலஜித் துறையின் பேராசிரியர் மாகல்ஹேஸ் மனிதனின் முதுமையை உருவாக்கக் கூடிய காரணிகள் பற்றி விளக்கியபோது ஒரு […]