பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்துள்ளது. போதுமான ஆழம் இல்லாததால் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் இரு பக்கங்களிலும் 135க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் முடங்கிக் கிடப்பதாகத் தெரியவந்துள்ளது. பனாமா கால்வாய் பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கை கால்வாய். அமெரிக்கக் கண்டத்தின் நடுவில் இருக்கும் குறுகிய நிலப்பரப்பு வழியாக இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரிலிருந்து அதற்கு எதிர் […]
காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் பெரிய பாலைவனமான ‘தார் பாலைவனம்’ இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலும் மறைந்துவிடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகின் இருபதாவது பெரிய பாலைவனம் மற்றும் உலகின் ஒன்பதாவது பெரிய வெப்பமண்டலப் பாலைவனமான ‘பெரிய இந்தியப் பாலைவனம்’ என்று அழைக்கப்படும் ‘தார்’ பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாகிஸ்தான் நாட்டிலும் இப்பாலைவனம் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கிறார்கள். இப்பாலைவனத்தின் பெரும்பகுதி […]
நமக்கு நன்றாக நினைவிருக்கும், சென்ற தலைமுறை காலத்தில் பருவ மழைக்காலங்கள் என்பவை குளிரான, நச நச என்று மழை தூரிக்கொண்டே இருக்கின்ற நாட்களாக இருந்தன. மழைக்காலம் முழுவதும் மழையாகவே இருக்கும். துணிகள் காயாது, வெளியே விளையாட இயலாது. மழையில்லை என்றாலும் மேகமூட்டம் குறையாது. சூரியனை பார்க்கவே முடியாது. இன்றைய காலகட்டத்தில் அப்படியெல்லாம் இல்லை என்பது கண்கூடு. மழைக்காலம் என்பது மழையும் வரும் ஒரு காலம் என்றாகிவிட்டது. திடீரென்று மேகம் கூடி மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிட்டுச் […]
செய்திச் சுருக்கம் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய தசாப்தத்தை விட 2010 மற்றும் 2019 க்கு இடையிலான காலகட்டத்தில் அதிவேகமாக உருகியுள்ளன. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? உலகில் வெப்பநிலை உயர்ந்து வருவதை எந்த ஆராய்ச்சியும் நமக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. அதை நாமே அன்றாடம் வேர்த்து வழிந்து உணர்ந்து வருகிறோம். நமக்கு முந்தைய தலைமுறையினரும் நாமும் அழித்த மரங்களுக்கும், கடலில் கொட்டிய கழிவுகளுக்கும் பதில் சொல்லும் நேரமிது. இருப்பினும், இந்த வெப்பநிலை உயர்வானது எதிர்பார்த்ததைவிட அதிவேகமாக நிகழ்ந்துவருவதாக […]