“இது என்னங்க கேள்வி? காலா காலமா தேனிலவுன்னாலும் இல்ல தன் துணையோட ‘என்ஜாய்’ பண்ணனும்னாலும் நாம போறது குளிரான மலைப் பிரதேசங்களுக்குத்தானேங்க..?” என்கிறீர்களா. நீங்கள் நினைப்பது சரிதான். நாம் எப்போதும் குளிரையும் செக்ஸ் உணர்வையும் இணைத்தே பார்க்கிறோம். குளிரான காலங்களிலும், குளிரான பிரதேசங்களிலும் நமக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படும் என்றும், உடலறவு செயல்படுகளில் சிறப்பாக இருக்க முடியும் என்றும் எண்ணுகிறோம். ஆனால் இதற்கென்று செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் வேறுவிதமாக அல்லவா இருக்கின்றன!! தட்பவெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் […]
நமக்கு நன்றாக நினைவிருக்கும், சென்ற தலைமுறை காலத்தில் பருவ மழைக்காலங்கள் என்பவை குளிரான, நச நச என்று மழை தூரிக்கொண்டே இருக்கின்ற நாட்களாக இருந்தன. மழைக்காலம் முழுவதும் மழையாகவே இருக்கும். துணிகள் காயாது, வெளியே விளையாட இயலாது. மழையில்லை என்றாலும் மேகமூட்டம் குறையாது. சூரியனை பார்க்கவே முடியாது. இன்றைய காலகட்டத்தில் அப்படியெல்லாம் இல்லை என்பது கண்கூடு. மழைக்காலம் என்பது மழையும் வரும் ஒரு காலம் என்றாகிவிட்டது. திடீரென்று மேகம் கூடி மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிட்டுச் […]
செய்திச் சுருக்கம் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய தசாப்தத்தை விட 2010 மற்றும் 2019 க்கு இடையிலான காலகட்டத்தில் அதிவேகமாக உருகியுள்ளன. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? உலகில் வெப்பநிலை உயர்ந்து வருவதை எந்த ஆராய்ச்சியும் நமக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. அதை நாமே அன்றாடம் வேர்த்து வழிந்து உணர்ந்து வருகிறோம். நமக்கு முந்தைய தலைமுறையினரும் நாமும் அழித்த மரங்களுக்கும், கடலில் கொட்டிய கழிவுகளுக்கும் பதில் சொல்லும் நேரமிது. இருப்பினும், இந்த வெப்பநிலை உயர்வானது எதிர்பார்த்ததைவிட அதிவேகமாக நிகழ்ந்துவருவதாக […]
செய்திச் சுருக்கம்: உண்மையில் பாதுகாப்பான காற்று மாசு என்று ஒன்று இல்லை. அனைத்து அளவிலான காற்று மாசுக்களும் வளர்இளம் பிள்ளைகளின் மூளையை பாதிக்கிறது என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? உலகமெங்கும் காற்று மாசு நாளுக்கு நாள் பெருகிவரும் இச்சூழலில் அனைத்து அரசாங்கங்களும், ஆய்வு நிறுவனங்களும் காற்றில் கலந்துள்ள மாசின் அளவை பாதுகாப்பானது என்றும் பாதுகாப்பான நிலையை மீறிய ஆபத்தான அளவு என்றும் வகைப்படுத்தி வந்துள்ளன. பொதுமக்களும் செய்திகளில் காட்டப்படும் அளவுகளைக் கொண்டு […]
செய்தி சுருக்கம்: குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், ஐ. நா. வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலி , உலகின் மோசமான மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சீனாவுடன் சேர்த்து கருத்து தெரிவித்தார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஆனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரின் கருத்து உண்மைக்கு புறம்பாக உள்ளது. 2022 ஆம் ஆண்டின் உமிழ்வு இடைவெளி அறிக்கையின் படி(Emission Gap Report), சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 15 கிகா […]