உலகில் பேசப்படும் ஆறாயிரம் மொழிகளில் உயர்தனிச் செம்மொழியாக விளங்குவது நமது தாய்மொழியான தமிழ்மொழி மட்டுமே. காலங்களில் மூத்ததும் பழமையானதும் என்பது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை. தமிழ்மொழியின் இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் வேறெந்த மொழியிலும் இல்லாதவை. தமிழறிஞர் கா. சிவத்தம்பி, ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் இருக்கிறது’ என்பார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில் உள்ள சொற்கள் பலவும் இன்னும் நம்மால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அளவிற்குத் தொடர்ச்சியான மரபு கொண்ட […]