பரந்த அளவிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா, சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பிரபல தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டீனின் சமீபத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. காப்புரிமை, அந்நிய நேரடி முதலீடு, அந்நியச் செலாவணி இருப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பகுப்பாய்வு செய்த பெர்ன்ஸ்டீன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்த இடைவெளியைத் தெரிவித்துள்ளது. காப்புரிமையைப் பொறுத்தவரை, இந்தியா சீனாவை விட 21 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. அந்நிய நேரடி […]
செய்தி சுருக்கம்: பிரிக்ஸ் நாடுகளின் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கடுமையான விதிகளை இந்தியா வலியுறுத்துகிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து குழுவை விரிவாக விரிவுபடுத்தவேண்டும் என்ற சீனாவின் முயற்சியை இந்தியாவும் பிரேசிலும் கடுமையாக எதிர்க்கின்றன. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? 2009 இல் உருவாக்கப்பட்ட BRICS குழுவில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடக்க இருக்கும் கூட்டத்திற்கான ஆயத்த பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியாவும் […]
இந்த மாதத் தொடக்கத்தில் சீன எலக்ட்ரிக் வாகன நிறுவனமான பிஒய்டி ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார கார்கள் மற்றும் பேட்டரிகளை உருவாக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு திட்டத்தைச் சமர்ப்பித்தது. இந்தியாவின் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் மேகா இன்ஜினியரிங் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொழிற்சாலையை அமைப்பதற்கான பிஒய்டியின் இந்த முன்மொழிவை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தக் கூட்டு முயற்சியானது இந்தியாவில் மின்சார கார்கள் […]
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு மந்திரிகள் பிராந்திய மாநாட்டின் இடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரும் சீனாவின் உயர்மட்ட தூதரான வாங் யீயும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பில் வாங் யீ தரப்பிலிருந்து சீன முதலீடுகளின் மீதான இந்தியக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் இந்திய-சீன எல்லையில் நிலவும் தற்போதைய மோதல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான ஒட்டுமொத்த உறவைப் பாதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, […]
செய்தி சுருக்கம்: இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் Ali Sabry அவர்களின் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் “அடுத்த வாரம் டெல்லியில் நிகழவுள்ள இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இலங்கையின் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், துறைமுக கட்டுமானங்களை விரிவு படுத்தவும் தேவையான விஷயங்களை இந்தியாவுடன் விவாதிக்க இலங்கை இந்த சந்திப்பை பயன்படுத்தி கொள்ள உள்ளது” என்று தெரிவித்தார். இலங்கையின் அண்டை நாடான இந்தியா, இந்த படுமோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவர இலங்கை எடுக்கும் […]