முந்தைய தலைமுறை மண்ணில் புரண்டு விளையாடி, ஆற்றில் குளித்து, குளத்தில் நீந்தி, மரத்தடியில் கூட்டாஞ்சோறு சமைத்து வளர்ந்தது. நாகரீகம் மிகுந்து சொகுசு மலிந்திருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதே பாதுகாப்பற்றது என்ற சூழல் உள்ளது. மாநகரங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் மைதானங்களே இல்லை! தன் நாளில் பெரும்பகுதியைக் கழிக்கும் பள்ளிகளே வகுப்பறைகள் மட்டும் இருக்கும் சிறைச்சாலைகள் போல இருந்தால் அந்த பிள்ளைகள் எங்கே விளையாடுவார்கள், எப்படி ஆரோக்கியமாக வளர்வார்கள்..? புத்திசாலிக் குழந்தைகள் குறித்த புதிய […]
உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களாக இருந்தால், அத்தகைய பழக்கம் இல்லாத குழந்தைகளைக் காட்டிலும் அவர்கள் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு கடந்த மாதம் ஜூலை 20-ல் இருந்து 27க்குள் எபிக் என்னும் நிறுவனத்தின் சார்பில் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஒன்போலால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவில் சந்தை ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுக்கருத்து ஆராய்ச்சிக்கான அமெரிக்கச் சங்கம் […]
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் திரைகளுக்கு முன்பாக அமர்ந்திருப்பது பிற்காலத்தில் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எனப் புதிய ஆய்வு ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 90களில் பிறந்த குழந்தைகள் அதாவது 1991-92 க்கிடையில் பிறந்த பதினான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பங்கேற்றனர். அவர்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் குழந்தைகளின் திரைக்கு முன்பான […]
கனடியக் குழந்தைகள் மருத்துவச் சங்கம் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் மொபைல் மற்றும் கணினித் திரைகளில் செலவிட வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. கனடா நாட்டின் நரம்பியல் மற்றும் கற்றல் குறைபாடுகளுக்கான ஆராய்ச்சித் தலைவரும் உதவிப் பேராசிரியருமான எம்மா டுயர்டன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தின்போது குழந்தைகள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு […]
சிறுவயது வறுமையால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும் எனவும் அவர்கள் கல்வியில் பின்தங்குவதற்கான முக்கியமான மற்றும் ஆபத்தான காரணியாக அது அமையும் எனவும் வெளிவந்திருக்கும் புதிய ஆய்வு முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. “கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை”, என்பாள் ஔவைப்பாட்டி. உண்மைதான்! சிறுவயதில் வறுமையில் வாடுவதைப் போன்ற ஒரு கொடுமை உலகில் வேறெதுவும் இல்லை. பசி, பிணி, பகை ஆகிய மூன்றும் இல்லாத நாடே நல்ல நாடு என்பார் வள்ளுவர். ஆனால் […]